அடாவடி தீட்சிதர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

அடாவடி தீட்சிதர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

அவனியாபுரம், ஜூன் 27 -   ''சிதம்பரம் கோவிலில் அதிகாரிகளிடம் தகராறு செய்த தீட்சிதர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்தாண்டு குடமுழுக்கு நடக்கவுள் ளது. அப்பணிகளுக்காக, 6 கோடி ரூபாய்க்கு அனுமதி கருத்துரு அனுப்பப் பட்டுள்ளது.

இக்கோவில் மலை மேல் ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப் பட்டுள்ளது. சாத்தியம் இருந்தால் இந்தாண்டே பணி துவங்கும்.

ஹிந்து கோவில்களில் ஹிந்துக்கள் தான் அனு மதிக்கப்படுவர் என்ப தல்ல. ஹிந்து வழிபாட்டு முறையை ஏற்று வழிபடும் எந்த மதத்தினராக இருந்தாலும், கோவில்களில் வழிபாடு மேற்கொள்ள லாம்.

'சிதம்பரம் கோவில் கனகசபை மீது ஏறி பக் தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கலாம். அது குறித்து இந்து சமய அற நிலையத்துறை முடிவெடுக்கலாம்' என, உயர் நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது.

இந்து சமய அறநிலை யத்துறையை கலந்தா லோசிக்காமல் சுயமாக இப்படி ஓர் அறிவிப்பை தீட்சிதர்கள் வெளியிடு வது ஏற்கக்கூடியது அல்ல.

எதைச் செய்யக் கூடாதோ, அதை செய் வது தான் அங்கிருக்கும் தீட்சிதர்களுக்கு பணியாக உள்ளது. நிர்வாக அதிகாரி பலகையை எடுக்கக் கூறியபோது, தகராறு செய்துள்ளனர். ஆலோசித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 4,000 ஏக்க ருக்கு மேல் கோவில் நிலங்கள் மீட்கப்பட் டுள்ளன. வேறு எங்கே இருந்தாலும் புகார் தெரிவித்தால், நிலங்களை மீட் டெடுக்க அறநிலையத் துறை தயாராக உள்ளது.

இந்து சமய அறநிலை யத்துறை நிலங்கள் அர சின் பயன்பாட்டிற்கு தேவை என்றால், வேறு இடங்கள் இல்லாத நிலை யில், அதை விற்கலாம் என் றும் கூட ஒரு தீர்ப்பு உள்ளது. - இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment