இந்தியாவில் பால் தட்டுப்பாடு: காங்கிரஸ் புகார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

இந்தியாவில் பால் தட்டுப்பாடு: காங்கிரஸ் புகார்

புதுடில்லி, ஜூன் 11 - வெண்மைப் புரட்சி கண்ட இந்தியா, தற்போது பால் தட்டுப்பாட்டின் விளிம்பில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி புகார் எழுப்பி உள்ளது. இது தொடர்பாக வெளியான ஊடக செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- 

வெண்மைப் புரட்சி ஏற்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியா பால் தட்டுப்பாட்டின் விளிம்பில் இருக்கிறது. இதனால் அதிகளவில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மாட்டுத்தீவன விலை உயர்வால் போராடுகிற விவசாயிகளுக்கு இது மேலும் வலியைத் தருகிறது. கரோனா தொற்று நோய்க்குப் பின்னர் இந்த நெருக்கடியால், உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடான இந்தியா, இப்போது பிற நாடுகளில் இருந்து பாலையும், பிற பால் பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் மோடி அரசு என்ன செய்கிறது? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment