ஆவடி மாவட்டம் முழுவதும் ‘வைக்கம் நூற்றாண்டு விழா’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 8, 2023

ஆவடி மாவட்டம் முழுவதும் ‘வைக்கம் நூற்றாண்டு விழா’

தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும்! - கலந்துரையாடலில் தீர்மானம்

ஆவடி, ஜூன் 8- ஈரோட்டில் நடை பெற்ற பொதுக்குழு தீர்மானங் கள் ஆவடி மாவட்ட கலந்து ரையாடல் கூட்டத்தில் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத் தில் தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கடந்த மாதம் 13 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை நிறை வேற்றவும், பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை ஆறு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் ஆசிரியரின் வழி காட்டுதலைப் பின்பற்றவும், ஆவடியில் மாவட்டக் கலந்து ரையாடல் கூட்டம், 3.6.2023 அன்று, ஆவடி பெரியார் மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர் செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் ச.இன்பக்கனி, சே.மெ.மதிவதனி, மாநில இளைஞரணி துணைச் செய லாளர் சோ.சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். புதிதாக மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுள்ள வெ.கார் வேந்தன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் க. இளவரசன், மாவட்டக் காப் பாளர் பா.தென்னரசு, மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

கழகத் தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம்!

முன்னதாக ஆவடி நகரச் செயலாளர் தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற, அனைவரும் அவரைப் பின்பற்றி கடவுள் மறுப்புக் கூறினர். மாவட்டச் செயலாளர் க. இளவரசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் பற்றி தலைமைக் கழக அமைப்பாளர், வி.பன்னீர்செல்வம் விளக்க மாகப் பேசினார். குறிப்பாக ஈரோட்டுத் தீர்மானங்களின் முக்கியத்துவம் குறித்து பகிர்ந்து கொண்டதோடு, ஆசிரியரின் கரத்தை வலுப் படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் களை வழங்கினார். தொடர்ந்து துணைப் பொதுச்செயலாளர் ச. இன்பக்கனி, அனைத்துக் கூட்டங்களிலும் மகளிர் பங் கேற்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட் டார். அவரைத் தொடர்ந்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், நிறை வாக துணைடப பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் அமைப்புரீதியாக தோழர்கள் இன்னும் கூடுத லாக கவனம் செலுத்தி, ஆசிரி யரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட னர். 

தொடர்ந்து, புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட தோழர்கள் உள்பட, மாநில, மாவட்ட நிர் வாகிகளுக்கு காப்பாளர் பா. தென்னரசு ஆடையணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து அனைத்துத் தோழர்களின் ஆலோசனை களும் தனித்தனியாகப் பெறப் பட்டன. 

ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இறுதியாக, ’ஒடிசா மாநி லம் பாலாசோரில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் உயிரி ழந்தவர்களுக்கு இரங்கல்’, ’மாவட்டம் முழுவதும் வைக் கம் நூற்றாண்டு விழா கூட் டங்களை நடத்துவது’, ’ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது’, ’எல்லா இடங்களிலும் கிளைக் கழகங் கள் தொடங்க முனைப்பு காட் டுவது’, கழக ஏடுகளுக்கு தொடர்ந்து சந்தா சேர்ப்பது’, ’மாவட்டம் முழுவதும் கழகக் கொடிகள் ஏற்றுவது’, ’புதிதாக பொறுபேற்றவர்களுக்கு பாராட்டும், நியமனம் செய்த கழகத் தலைவருக்கு நன்றி செலுத்துவது’ என ஏழு தீர்மா னங்களை இறுதி செய்யப்பட்டு, மாவட்டச் செயலாளர் க. இள வரசன் முன்மொழிய, தோழர் கள் அனைவரும் பலத்த கையொலி எழுப்பி, அதன் மூலம் தீர்மானங்களை வழி மொழிந்து ஒருமனதாக ஏற் பளித்தனர். 

இறுதியில் மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் கண்ணன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

நிகழ்ச்சியில் சி.வ.வேலு, அ.வெ.நடராசன், மாவட்ட மகளிரணித் தலைவர் 

மு.செல்வி, நாகம்மையார் நகர் ரவீந்திரன், திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணித் தலைவர் 

கி.ஏழுமலை, மாவட்ட துணைச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன், ஜெயராமன், ஆவடி நகரத் தலைவர் கோ. முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முருகேசன், துணைச் செயலாளர் கார்த்தி கேயன்,  பட்டாபிராம் வேல் முருகன், கன்னடபாளையம் தமிழரசன், மதுரவாயல் பகு தித் தலைவர் வேல்சாமி, சர வணன், பூவை வெங்கடேசன், திருநின்றவூர் அருண், அருள்தாஸ் (எ) இரணியன், திருநின்றவூர் பகுதி தலைவர் ரகுபதி, ராணி ரகுபதி, அம்பத் தூர் சிவக்குமார், புதிய தோழர் அரவிந்தன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment