பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை

மதுரை, ஜூன் 18 பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பத்திர பதிவுத் துறை அதிகாரிகளுடன் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சீராய்வு கூட்டம் நேற்று (176.2023) நடந்தது. அதன்பின்னர் அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டி: 

சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பதிவுக்கு வரும் பொதுமக்கள் முந்தைய தினம் இணையத்தில் பதிவு செய்து, டோக் கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். 15 நிமிடத்திற்குள்ளாகவே பதிவு பணியை முடித்துக்கொண்டு சென்றுவிடலாம். பதிவு தொடர்பாக அரசுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டி இருந்தாலும் ஏடிஎம் கார்டில் ஸ்வைப் செய்து செலுத்தும் வகையில் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இணையம் மூலமாகவே செலுத்த வேண்டி உள்ளதால், மக்கள் பத்திர பதிவுக்காக கையில் பணம் கொண்டு வரத் தேவையில்லை.

அங்கு நேரடி பணப்பரிவர்த்தனை எதுவும் நடை பெறுவதில்லை. பத்திர பதிவின்போது யாராவது லஞ்சம் கேட்டால், இதுகுறித்த புகார்களை பதிவுத்துறை தலை வருக்கு அல்லது பதிவுத்துறை செயலாளருக்கு அனுப் பலாம். லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இதற்கென தொடர்பு எண்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைவர் பார்வையிலும் படும்படி எழுதி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனை கருதி பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்மூலம் தற்போதுள்ள சிறுசிறு தாமதமும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment