பொது இடங்களில் குப்பைகளைக் கொட்ட கேரள அரசு தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்ட கேரள அரசு தடை

திருவனந்தபுரம், ஜூன் 13 கேரளா வில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் யாருக் கும் தெரியாமல் குப்பை, கழிவுகளை கண்ட இடங்களிலும் சிலர் கொட் டிச் செல்கின்றனர். இந்த நிலையில், கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- 

குப்பை, கழிவுகளை பொது இடங் களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் பற்றி ஒளிப்படம் அல்லது காட்சிப் பதிவு ஆதாரங்களுடன் உள்ளாட்சித் துறை அலுவலகங்களின் செயலாளர் களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத் தில், தகவல் தரும் நபர்களின் விவ ரங்கள் ரகசியமாக வைக்கப்படும். குப்பை கொட்டுப வருக்கு அபராத மாக விதிக்கப்படும் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2500 வரை தகவல் தருபவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான வாட்ஸ்அப் எண்கள், மெயில் அய்.டி. ஆகியவை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப் படுத்தப்படும். பொது இடங்களில் குப்பை கழிவு களை கொட்டுவோருக்கு குறைந்தது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment