பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பல்கலைக்கழகம் மூலம் தமிழ் கற்பிக்க ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பல்கலைக்கழகம் மூலம் தமிழ் கற்பிக்க ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஜூன் 13 - பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்பிக்க, அங்குள்ள தமிழ்ச்சோலை அமைப்பு மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் வளர் மய்யம் இடையே (10.6.2023) அன்று ஒப்பந்தம் கையெ ழுத்தானது. 

தமிழ்ப் பல்கலக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக் கழகப் பதிவாளர் சி.தியா கராஜன், தமிழ்ச்சோலை அமைப் பின் கல்வித் திட்ட அலுவலர் சிவ ஞானம் தனராஜா ஒப்பந் தத்தில் கையெழுத் திட்டனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து பல் கலைக்கழகத் துணை வேந்தர் வி.திருவள்ளுவன் பேசும்போது, ‘‘தமிழ் வளர் மய்யத்தின் ஒலி- ஒளி காட்சிக் கூடத்தின் வாயிலாக, நவீன தொழில்நுட்ப வசதிக ளுடன் சங்க இலக்கியம், திருக்குறள், பேச்சுத் தமிழ் போன்றவற்றை மய்யப்படுத்தி, பிரான்ஸ் நாட்டுத் தமிழர்களுக் கான வகுப்புகள் நடத் தப்படும்’’ என்றார். 

பிரான்ஸ் தமிழக் கல்வி: 

தமிழ்ச்சோலை அமைப்பின் கல்வித் திட்ட அலுவலர் சிவ ஞானம் தனராஜா பேசும் போது, ‘‘பிரான்ஸ் கல்வித் திட்டத்தில் தமிழை இணைப்பதில் வெற்றி கண்டுள்ள தமிழ்ச் சோலை அமைப்பு, அடுத்த கட்டமாக தமிழ்ப் பல்கலைக் கழகத் தின் தமிழ் வளர் மய்யம் மூலம் தமிழ் சார்ந்த பல்வேறு படிப்புகளை இக்கல்வியாண்டிலேயே முன்னெடுக்க உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இளையாப் பிள்ளை, திட்டங்கள் பிரிவின் பொறுப்பு அலு வலர் செல்வி, பிரிவு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு களை தமிழ் வளர் மய்ய இயக்குநர் இரா.குறிஞ்சிவேந்தன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment