கூட்டணியை வலுப்படுத்துவோம் - பி.ஜே.பி.யை வீழ்த்துவோம்! - து.ராஜா பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

கூட்டணியை வலுப்படுத்துவோம் - பி.ஜே.பி.யை வீழ்த்துவோம்! - து.ராஜா பேட்டி

ராஞ்சி, ஜூன் 20- வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற் கடிப்பதற்காக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும் ஒன்றிணைந் துள்ளன. ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல  என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள து.ராஜா அளித்த பேட்டியில், நாட்டின்  தற்போதைய நிலைமை கவலையளிப்பதாக உள்ளது என்றும், ஜனநாயகத்தை பாதுகாக்க சங் பரிவார்களை வேரோடு அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார். 

“பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக, அதன்  நிகழ்ச்சி நிரலைப் பா.ஜ.க. மூலம் அமல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக  நாட்டில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் வெளிப்படையாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு பக்க பலமாக உள்ளது. மேலும் நாடாளுமன்றம் கூட தேவையற்றதாக ஆக்கப்படுகிறது” (கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி  பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை என்றார்.)

அரசமைப்பு, ஜனநாயகம், மற்றும் தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப் பதற்காக பாஜகவை தோற்க டிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றே மதச்சார்பற்ற ஜன நாயக கட்சிகள் கருதுகின்றன. அரசி யல் அதிகாரத்தைப் பெறுவதற்காக அல்ல.பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த  அமைக்கப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு  தலைமை யார் என்பது பிரச்சினை அல்ல. கட்சிகள் போதுமான அளவு முதிர்ச்சியடைந்துள்ளதால், எல்லா வற்றையும் கூட்டாக பேசி முடிவெடுக் கலாம்,” என்றும்  அவர் கூறினார். 

அய்க்கிய முற்போக்கு கூட்டணி  வெற்றி பெற்ற பிறகு தலைமை குறித்து  கேள்விகள் எழுப்பப்பட்டது. பொது வான குறைந்தபட்ச வேலைத்திட்டம் கூட அய்க்கிய முற்போக்கு கூட்டணியில் கூட் டாக விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டது அந்த அனுபவம் உள்ளது. அதில் எந்த பிரச்சனையும் உருவாகவில்லை என்றும்  நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த இணையும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளின் ஒற்றுமைக்கு முன்நிபந்தனைகள் இல்லை என்றும் து.ராஜா கூறினார். 

ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் பீகார்  முதலமைச்சரும், அய்க்கிய ஜனதா தளம்  தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற இருக்கக்கூடிய  எதிர்க்  கட்சிகளின் கூட்டத்தில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர் தலுக்கான வியூகத்தை எதிர்க்கட்சிகள் வகுக்க இருக்கின்றன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூ ரில் மே 3 ஆம் தேதி துவங்கிய வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். ஆனால் இன்று வரை பிரதமர் மோடி வாயை  மூடி மவுனம் சாதிக்கிறார். மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்தும் வாய்  திறக்கவில்லை. மணிப்பூரின் வன் முறைக்கு பா.ஜ.க.தான் காரணம் என்று  து.ராஜா குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment