சாலை ஆய்வாளர் பணிக்கு அய்டிஅய் முடித்தவர்கள் தகுதியானவர்கள் மதுரை உயர் நீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

சாலை ஆய்வாளர் பணிக்கு அய்டிஅய் முடித்தவர்கள் தகுதியானவர்கள் மதுரை உயர் நீதிமன்றம் ஆணை

மதுரை, ஜூன் 13 - சாலை ஆய்வாளர் பணிக்கு அய்டிஅய் படித்தவர்கள்தான் தகுதியானவர்கள் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 761 சாலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்காக தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க கட்டட பட வரைவாளர் பிரிவில் அய்டிஅய் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இந்த பணிக்கு சிவில் பொறியியல், டிப்ளமோ முடித்தவர்கள்தான் தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.  அய்டிஅய் படித்தவர்களுக்கு சாலை ஆய் வாளர் பணி வழங்கவும், சிவில் பொறியியல் டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவு: சாலை ஆய்வாளர் பணி நியமனத்தை பொறுத்தவரை, கட்டட பட வரைவாளர் பிரிவில் அய்டிஅய் முடித்ததற்கான சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன.

ஆனால், டிஎன்பிஎஸ்சி நேரடி டிப்ளமோ, பொறி யியல் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. எனவே, சாலை ஆய்வாளர் பணிக்கு கட்டட பட வரைவாளர் பிரிவில் அய்டிஅய் படித்து சான்றிதழ் பெற்றுள்ள வர்கள்தான் தகுதியானவர்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment