இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம் அவர்களை தகுதி உடையவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம் அவர்களை தகுதி உடையவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை

சென்னை, ஜூன்.27- இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம் என்றும், மாணவர்களை தரமான மனிதர்களாக உருவாக்குவதே அரசின் கடமை என்றும் 'சிற்பி' திட்ட நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரசு பள்ளி மாணவர்களை நல் வழிப்படுத்தும் வகையில், 5ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, சென்னை மாநகர காவல்துறை சார்பில் 'சிற்பி' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பாடத்திட்ட புத்தகங்கள், புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப் பட்டன. 

இந்த திட்டத்தின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (26.6.2023) மாலை நடந்தது. விழாவில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வரவேற்றார். முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 5 ஆயிரம் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவதன் அடையாளமாக, மேடையில் 5 மாண வர்களுக்கு சான்றிதழ் களை வழங்கி பாராட்டினார். மேலும், "சிற்பி கீதம்" என்ற பாடலையும் அவர் வெளியிட் டார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

நம்மோடதிராவிடமாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் மிகப் பெரிய மறுமலர்ச்சி நடந்து கொண்டு வருகிறது. இந்தியாவில் எல்லாவற்றிலும் நம்பர்-1 தமிழ்நாடு என்று சொல்கின்ற அளவுக்கு நாம் இன்றைக்கு வளர்ந்து கொண்டு வருகி றோம்.

அதிலும் குறிப்பாக, கல்வித் துறை யில மகத்தான சாதனைகளை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு முக்கியமான சாதனை என்னவென்று கேட்டீர்கள் என்றால், காலை சிற்றுண்டி திட்டம், அதை நான் பெருமையாக சொல்வேன். ஒழுக்கத்தில் முதன்மை மாணவர்களை படிப்பில் பள்ளியிலேயே முதலாவது எடுக்க வைக்கின்ற மாதிரி, ஒழுக்கத்திலும், பொறுப்பிலும் முதன்மையானவர் களாக ஆக்குகின்ற திட்டம் தான் இந்த 'சிற்பி' திட்டம். உங்களுடைய சாதனை கள் என்னை மட்டுமல்ல எல்லோரையும் வியப்படைய வைத்திருக்கிறது. இந்த இளம் வயதில் இந்த சாதனைகளைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருப் பது நீங்கள் இதை ஒரு பெரிய மைல் கல்லாக நினைக்க வேண்டும். 

இதுபோன்ற செயல்கள் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும், உங்களு டைய சுற்றத்தையும் சீர்மைப் படுத்தும். அதோடு, சிறார் குற்றங்கள் கட்டுப்படுத்துவ தில் தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு சிறப்பான கவ னத்தை செலுத்திக்கொண்டு வருகிறது.

நாளைய எதிர்காலம் இன்றைய இளைஞர்களே, நாளைய எதிர்காலம். இளைஞர்களை சீர்படுத்தினாலே, எதிர்கா லத்தை சீர்படுத்த முடியும். அப்படி உரு வாகக்கூடிய இளைஞர்கள் சிறந்த சமுதா யத்தை நிச்சயமாக செதுக்குவார்கள். என்னைப் பொறுத்தவரை, மாணவர் களை தரமான ‘மனிதர்களாக' உருவாக் குவதே அரசாங்கத்தின் கடமையாக நான் கருதுகிறேன். 100 சதவீத படிப் பறிவு என்பதை நாம் நிச்சயம் எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியை கொடுத்தாக வேண்டும். இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும்.

படிப்பு பிரிக்க முடியாத சொத்து - அதிலும் குறிப்பாக, கற்றல் குறை பாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். இங்கே வந்திருக்கின்ற உங்களிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். பள்ளியோடு கல்வியை நிறுத் திடாமல் எல்லோரும் கல்லூரிகளுக்கு போகவேண்டும். புதிய புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துங்கள். படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து. 

உங்களுடைய படிப்பையும், திறமை யையும் பார்த்து, பெரிய பெரிய கம் பெனிகள் உங்களை அழைத்து வேலை கொடுக்க வேண்டும். நீங்களும் தொழில் தொடங்கி, நிறையப் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். உங்களோட மற்ற கவலைகளைப் போக்குவதற்கு மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலி னான நான் இருக்கேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. படிக் கின்ற காலத்தில் உங்களுக்கு வேறு எதிலும் கவனச்சிதறல்கள் இருக்கக் கூடாது. 

-இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் அமைச்சர்கள் க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, அன் பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சென்னை நகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

முடிவில் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment