பதாகைகள் அகற்றம் - குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பிஜேபியினர் அராஜகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

பதாகைகள் அகற்றம் - குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பிஜேபியினர் அராஜகம்

 குடியாத்தம், ஜூன் 11 - தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் வேலூர் பொதுக்கூட்டத்தில் இன்று (11.6.2023) பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர். இவர்களை வர வேற்று குடியாத்தம் நகரத்தில் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை அனுமதி இல்லாமல் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக ஆபத்தான முறையில் 2 பெரிய கட்அவுட் பதாகைகள் பாஜவினர் வைத்தனர். 

இதனை அறிந்த நகராட்சி ஊழியர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் பதாகையை அகற்றினர். இதை யடுத்து குடியாத்தம் நகர பாஜ தலைவர் சாய்ஆனந்த் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட பாஜவினர் குடியாத் தம் நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பணியாளர் களிடம் எதற்காக பதாகைகளை அகற்றினீர்கள் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அலுவல கத்தில் இருந்த பெண் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். 

இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது. இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் புகாரின்படி குடியாத்தம் டவுன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment