இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தமிழர்கள் பகுதியில் பெரும் பரபரப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 9, 2023

இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தமிழர்கள் பகுதியில் பெரும் பரபரப்பு

கொழும்பு, ஜூன் 9 இலங்கையில் தமிழ் தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர் யாழ்ப்பாணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் நேற்று முன்தினம் (7.6.2023) இலங்கை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப இருந்தார். அந்த நேரத்தில், கொழும்பு நகரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

காவல்துறையினர் தங்கள் கட மையைச் செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டின்பேரில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை காவல்துறையினர் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. அவர் அங்குள்ள கீழமை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு பிணை வழங்கப்பட் டது. இருப்பினும் நாடாளுமன்றத்துக்கு செல்லவிருந்த நிலையில் அவர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டது தமிழர்கள் பெரு வாரியாக வாழும் வடக்கு மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  கைது பற்றி கூறப்படுவதாவது:-

கடந்த 2-ஆம் தேதியன்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் எம்.பி, வடமராட்சி என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். அந்த இடத்தில் கூட்டம் நடத்துவது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு சி.அய்.டி. அதிகாரிகள் என்று சிலர் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் வந்து அவரைச் சந்தித்துள்ளனர். ஆனால் அவர்களை அடையாள அட்டையை காட்டும்படி அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது காவலர்கள் அவரை தாக்கியும் உள்ளனர். வந்த காவல்துறையினர் ஒருவர் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியும் உள்ளார். மேலும் அவரை மருதங்கேணி காவல் நிலையத்துக்கு வந்து வாக்கு மூலம் அளிக்குமாறு கூறி உள்ளனர்.

ஆனால் அவர் நாடாளுமன்ற தலைவரைத் தொடர்பு கொண்டு பேசி தனக்கு நடந்ததை கூறினார். அதைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து உரிமை பிரச்சினையை எழுப்ப லாம் என்றும் 12-ஆம் தேதிக்கு பின்னர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்கலாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதையொட்டி காவல்துறை தலைவர் அவருக்கு உறுதியும் அளித்துள்ளார். அதையும் மீறித்தான் கைது நடவடிக்கை நடந்துள்ளது.  தெரிய வந்துள்ளது.


No comments:

Post a Comment