கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் நால்வர் பலி 8 பேர் மருத்துவமனையில் அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் நால்வர் பலி 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

கரூர், ஜூன் 12 கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 41). இவரது மனைவி ரூப தேவி (37). சம்பவத்தன்று இவர்கள் மற்றும் உறவினர்களான முத்துலட்சுமி (46), அவரது மகன் வீராசாமி (10). மகள் கோவர்தினி (14), நதியா (32), ரஜினிஸ் (16), கமல் இருதயராஜ் (50) ஆகியோர் ஒரு சரக்கு வேனில் புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள் ளனர். அங்கு வழிபாட்டை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு (10.6.2023) ஊருக்கு புறப்பட்டனர். வேனை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த வினோத் (35) என்பவர் ஓட்டி வந்தார்.இந்த சரக்கு வேன் நேற்று  (11.6.2023)அதிகாலை 2 மணி அளவில் கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு முன்னூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே திருப்பூர் மாவட்டம், காங்கேயத் தில் இருந்து திருச்சிக்கு தார் லோடு ஏற்றிக் கொண்டு மற்றொரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் 2 சரக்கு வேன்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த கோர விபத்தில் நதியா, முத்துலட்சுமி, ரூபதேவி வேன் டிரைவர் வினோத் ஆகிய 4 பேரும் வேனின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் வெங்கடேஷ், கமல் இருதயராஜ், ரஜினிஸ், கோவர்தினி, வீராசாமி, தார் லோடு ஏற்றி வந்த வேனில் வந்த திருச்சி சமயபுரம் பாலாஜிநகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (30), மணிகண்டன் (31), அந்த வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் ரூபன் (33) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தென்னிலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 8 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உடற் கூராய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வம், ரூபன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்கு வரத்தை காவல்துறையினர் சீர் செய்தனர். விபத்து குறித்து தென்னிலை காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment