பிஜேபி ஆளும் மணிப்பூரில் கலவரம் உச்சக்கட்டம் 50 ஆயிரம் பேர் வெளியேறினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

பிஜேபி ஆளும் மணிப்பூரில் கலவரம் உச்சக்கட்டம் 50 ஆயிரம் பேர் வெளியேறினர்


இம்பால், ஜூன் 12 நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும் பான்மை சமூக மாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டிய லில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் அங்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக் கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் இதைத் தீவிரமாக எதிர்க் கின்றன. இதனால் இரு தரப் பிலும் நடந்து வருகிற மோதல்களால் தொடர்ந்து உயிரிழப் புகள் ஏற்பட்டு வருகின்றன. 

இதனால் அந்த மாநிலத்தில் பதற்ற மான சூழல் தொடர்கிறது. காவல் நிலையங்களில் இருந்து கலவரக்காரர்கள் ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்று தாக்குதலுக்கு பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் பிரேன் சிங்கும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வேண்டுகோள் விடுத்தனர். அதைத் தொடர்ந்து 990 ஆயுதங்களும், 13 ஆயிரத்து 526 வெடிபொருட்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இம்பால் கிழக்கு பகுதியில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கலவரக்காரர்கள் தாங்கள் பறித்துச்சென்ற ஆயுதங்களை ஓசையின்றி ஒப்படைப்பதற்கு ஒரு பெட்டியை வைத்தது, அங்கு பேசு பொருளானது. அதிலும் தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட 130 ஆயுதங்களை கலவரக்காரர்கள் போட்டுள்ளனர்.

50 ஆயிரம் பேர்  இடம் பெயர்வு

இந்த நிலையில், மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் ஆர்.கே. ரஞ்சன், இம்பாலில் 11.6.2023 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

மாநிலத்தின் அனைத்து மாவட் டங்களிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதங்களைத் தேடும் பணி நடக்கிறது. இந்த தேடுதல் வேட் டையில் 53 ஆயுதங்களும், 39 குண்டு களும் கைப்பற்றப் பட்டன. கலவரத்தால் 50 ஆயிரத்து 698 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இதையொட்டி மணிப்பூர் அரசு ஒரு அறிக்கையும் வெளியிட்டது. அந்த அறிக்கையில், "அத்தியாவசியப் பொருட் களின் விலைவாசி உயர்வைத் தடுக்க விலைக்கட்டுப்பாட்டு வழி முறை பின்பற்றப்படுகிறது. மாநிலத்துக்கு தேசிய நெடுஞ்சாலை எண்.37 வழியாக பல் வேறு பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. 35 ஆயிரம் டன் கட்டுமானப்பொருட்கள், எரி பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், 2,376 லாரி களில் கொண்டு வரப்பட்டுள்ளன" என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மணிப்பூரில், கடந்த மாதம் 3-ஆம் தேதி, இரு சமூகத்தின ருக்கிடையே கலவரம் மூண் டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ஆம் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக் கப் பட்டு வருகிறது. 

இந்நிலையில், இத் தடை இம்மாதம் 15-ஆம் தேதி பிற் பகல் 3 மணிவரை நீட்டிக்கப்பட் டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை பிறப்பித்துள்ளது.


No comments:

Post a Comment