கேரளாவில் வேகமாக பரவும் டெங்கு, எலிக்காய்ச்சல் இதுவரை 34 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

கேரளாவில் வேகமாக பரவும் டெங்கு, எலிக்காய்ச்சல் இதுவரை 34 பேர் பலி

திருவனந்தபுரம், ஜூன் 18 கேரளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல் உள்பட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34 பேர் பலியாகி விட்டனர். 

கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா, மஞ்சள் காமாலை, டைபாய்டு உள்பட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.  

இந்த ஆண்டு கேரளாவில் எலிக் காய்ச்சலால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. பாலக்காட்டை சேர்ந்த ஜினு மோன் (32) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இவர் மரணமடைந்தார். 

இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் கேரளாவில் டெங்கு காய்ச் சலால் மரணமடைந்தவர்கள் எண் ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. கேர ளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல் உள்பட தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

 


No comments:

Post a Comment