விடுதலை களஞ்சியம் [முதல் தொகுதி - 1936] - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 22, 2023

விடுதலை களஞ்சியம் [முதல் தொகுதி - 1936]

 உரத்தநாடு இரா.குணசேகரன் 

மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்  

"விடுதலை களஞ்சியம்" படித்து மகிழ்ந்தேன்.

'விடுதலை'ப் பற்றிய ஆய்வுரை என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையை படித்த போது பெருமை, வேதனை, கோபம், கவலை உள்ளிட்ட உணர்வுகள் தோன்றின.

 தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காக, தமிழர்களின் மான வாழ்விற்காக அறிவுலகப் பேரா சான் தந்தை பெரியார் நீதிக் கட்சியை ஆதரித்தும், நீதிக் கட்சிக்குத் தலைமையை ஏற்றும் எத்தனை உளச்சுமையோடு பாடுபட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது .

பார்ப்பனர்களுக்கென்று பல ஏடுகள் இருந்தும் தமிழர்களுக்கென்று ஒரு நாளேடு இல்லையே என்ற கவலையில் 'விடுதலை'யை  தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் எத்தகைய துன்பத்திற்கு ஆளா னார்கள் என்பதை.. "விடுதலை யின் காரணமாகவும், பல தோழர்களின் ஆலோசனை -வேண்டுகோள் காரணமாகவும், பல அபிமானிகள் முன் வசூல் புத்த கத்துடன் போக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன் 

பலர் மகிழ்ச்சியை முகத்திலும் கையாலும் காட்டி வரவேற்றார்கள்.

பலர் அது அல்லாததையும் செய்தார்கள்.

பலர் முன்னாள் மகிழ்ச்சி காட்டி கைகளையும் தாராளமாய்க் காட்டி, பல தடவை ஞாபகப்படுத்தியும் கவலை இல்லாமலும் இருக்கிறார்கள் .அப்படிப் பட்டவர்களுக்கு ஞாபகப்படுத்தினாலும் மற்றும் பலரிடம் சென்று பட்டியலை நீட்டுவதினாலும் உண் மையிலேயே நான் இதுவரை அடைந்திடாத வெட்கக் கேட்டை அடைகிறேன் என்பதை உணருகிறேன் "

என்று 4.7.1937இல் வெளிவந்துள்ளகட்டுரையை படிக்கும் போது ஏற்பட்ட வேதனைக்கு அளவே இல்லை. 

53 -ஆம் பக்கத்தில் 'திராவிட' மக்கள் சற்றேறக் குறைய தெளிவான இரு பிரிவுகளாக காணப்பட்டு விட்டார்கள்.  திராவிடர்களின் இழிநிலையைப் பற்றி அவர்களது முன்னேற்றத்திற்கும் மனிதத் தன் மைக்கும் கேடாக இருக்கும் தன்மைகளைப் பற்றி கவலையற்று தங்கள் நலனையே பார்த்துக் கொண்டு வாழ்வை நடத்துவது என்பது -

மற்றொன்று, தங்களைப் பற்றி கவலை இல்லாமல் இன்றைய இந்த இழிநிலையைப் போக்கத் தம்மா லானதைச் செய்வது - செய்யும் முயற்சியில் முடிவெய் துவது. அதனால் ஏற்படும் கஷ்டநட்டங்களை ஏற்பது என்பதாகும் .

இவற்றுள் முன்னவர்களில் இரண்டு பிரிவினர்கள் இருந்துவருகின்றனர்.  இவர்களுள் ஒரு சாரார், எதிரி களுடன் சேர்ந்து திராவிடர்களுக்கு இடரையும் தடை யையும் இவற்றுள் செய்யத் துணிந்து, ஆரியர்களுக்கு உடந்தையாயும் அடிமையாயும் இருந்து வரும் வழுக்கி விழுந்த  திராவிட சகோதரர்கள்:

மற்றொரு சாரார் ,அவர்களுடனும் சேராமல், நம்மோடும் சேராமல் -

நடுநிலைமை காட்டிக்கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் நடந்து, மற்ற இரு கூட்டத்தாரின் தொண்டிலும்பங்குபெற்றுத் தங்கள் சொந்த வாழ்வை மாத்திரம் கவனித்து, அதற்காக எதுவும் செய்யத் துணிவு கொண்ட திராவிடர்கள். இவர்கள் தங்களை மற்ற யாவரையும் விட மேதா விகள், மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சுயநல வேட்டை ஆடுகிறவர்கள் ஆவார்கள் .

இத்தகைய எந்த பிரிவும் ஆரியருக்குள் இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும் "

என்ற அறிவாசானின் வேதனையை இன்றைக் கேனும் நம் மக்கள் உணர்ந்து படித்து இன உணர்வு பெறவேண்டுமே  என்ற கவலை தோன்றியது .

ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து, அரசினரின் கட்டுப்பாட்டை தகர்த்து, சிறை சென்று, பெரும் பொருளிழப்பிற்கு ஆளாகி, பல்வகையான துரோகங் களை தூளாக்கி 'விடுதலை' வெளிவந்திருக்கிறது என்பதை 'விடுதலை' களஞ்சியத்தை படிக்கும் போது தெளிந்து, 'விடுதலை'யை தமிழ் மக்கள் அனை வரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற ஆவல் மேலோங்குகிறது .

எல்லாவற்றிற்கும் கொடுமையாக டி.பி. வேதா சலம், குத்தூசி குருசாமி போன்றவர்கள் செய்த துரோ கத்தை படிக்கும்பொழுது ஏற்படும் ஆத்திரத்திற்கு அளவே இல்லை .

அய்யாவின் காசில் வாழ்ந்துகொண்டு,அவரது தொண்டால் விளம்பரம் பெற்று ,அவரது இடத்தில் இருந்து கொண்டு கிண்டல் கேலி செய்தும், பொய்யாக எழுதியும், காட்டிக் கொடுத்தும் வாழ்ந்தார்கள் என் பதை எண்ணும்போது மனிதத் தன்மை அற்றவர்கள் என்ற கோபம் மேலிடுகிறது.

 80 -ஆவது பக்கத்தில் காலந்தோறும் விடுதலை ஏடு நன்கொடை விவரங்களை அறிவோமா ?என்ற கட்டுரையில் 

1.6. 1935இல் அரையணாவில் தொடங்கி 

1. 6 .2022இல் ஆறு ரூபாய்க்கு 'விடுதலை' இன்று கிடைக்கிறது என்ற செய்தியை படிக்கிற பொழுது அளவற்ற மகிழ்ச்சி தோன்றுகிறது.

"தந்தை பெரியார் விட்டு சென்ற பணிகளை 

அவர் போட்டுத் தந்த பாதையில் 

எந்தவித சபலத்திற்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்" என்ற தமிழர் தலைவர் ஆசிரியரின் சூளுரையின்படி,

 தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும், ஆசிரியர்மீது கொண்ட நம்பிக் கையை நிலைநாட்டி, பேருழைப்பைநல்கி 89-ஆம் ஆண்டில் 'விடு தலை'யை  தடம் பதிக்கச் செய்துள்ள தமிழர் தலைவர் ஆசிரியருக்கு தலை தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 75 தலைப்புகளில் உள்ள கட்டுரைகளில் குறிப்பாக பாண்டியன்- ராமசாமி அறிக்கை மற்றும்

"மனம் போன போக்கில்" என்ற தலைப்பில் குட்டிச்சாத்தான் எழுதிய கட்டுரை மிகவும் உணர்ச்சி கரமாக உள்ளது .

12 ஆவது கட்டுரையாக 6.5.1936 அன்று 'விடுதலை' யில் தோழர் கணபதி எழுதிய தஞ்சை ஜில்லா உயர்தர பள்ளிக்கூடங்கள் முற்றிலும் பார்ப்பன மயம் என்ற கட்டுரை அரிய தகவலாக கிடைக்கிறது ..

அதில் ஒரு மகிழ்ச்சி தகவல் ஒரத்தநாடு பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழர் ,மொத்த ஆசிரியர்கள் 14 பேரில் மூவர் மட்டுமே பார்ப்பனர் என்ற செய்தி யாகும் .

சுயமரியாதைத் திருமணம் என்ற தலைப்பில் 1936 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தாராசுரத்தில் கே.கே. நீலமேகம் தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த சுயமரியாதைத் திருமணம் என்ற செய்தியும் படித்து மகிழ்ந்தோம் 

ஜஸ்டிஸ் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் என்று  26.12.1936ஆம் தேதி வெளிவந்த கட்டுரை 

தந்தை பெரியாரின் வாழ்நாள் தொண்டு களாலும், தமிழர் தலைவர் ஆசிரியரின் ஓய்வறியா உழைப் பினாலும் திராவிடர் இயக்க சாதனையாக இன்று  செயலாக்கம்  பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

"விடுதலை களஞ்சியம்" எனும் வீர வரலாறு தொடர்ந்து வெளி வரட்டும் கொண்டு சேர்க்கும் பணிகளில் கருஞ்சட்டை வீரர்கள்  ஆயத்தமாகவுள் ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment