சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.15 கோடியில் நடைமேம்பாலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.15 கோடியில் நடைமேம்பாலம்

சென்னை, ஜூன் 18 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தனர். 

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-_2024ஆம் நிதியாண் டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சேப்பாக்கம் - _திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணா சாலை, டேம்ஸ் சாலை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைப்பது தொடர் பாகவும், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா, சுற்றுச்சுவர், பார்வையாளர் மாடம், பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பாகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் களஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுகளின்போது, மக் களவை உறுப்பினர் தயாநிதி மாறன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உடனிருந்தார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்பு களை விரைவுபடுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டிருந்தார். 

அதன்படி, சென்னை பெருநகர பகுதிகளில் 26 சட்டமன்ற தொகுதி களின் மேம்பாட்டிற்காக 34 இடங் களில் கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment