அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் மருத்துவமனையில் அனுமதி - முதலமைச்சர் நலம் விசாரித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் மருத்துவமனையில் அனுமதி - முதலமைச்சர் நலம் விசாரித்தார்

சென்னை, ஜூன் 15 - நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக் கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, பின்னர் மருத்துவமனையின் 6-ஆவது தளத்தில் இயங்கும் இதய அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க மருத்துவ மனைக்கு நேற்று (14.6.2023) காலை 10.15 மணிக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு  உள்ளிட்டோரும் வந் தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ட தும், செந்தில் பாலாஜி எழுந்திருக்க முயன்றார். ஆனாலும் பரவாயில்லை என அவரை தட்டிக்கொடுத்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித் தார். பின்னர் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்ட றிந்தார். 

அதன்பிறகு அவர் காலை 10.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென் றார். நெஞ்சுவலி நீடிப்பதாக சொன் னதை தொடர்ந்து, அவருக்கு ஈ.சி.ஜி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து காலை 10.40 மணிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. இதில் 3 முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு  உள்ளது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப் பட்டது. 

தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். மருத் துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காண மருத்துவ மனைக்கு அமைச்சர்கள் கார் ஒவ் வொன்றாக அணிவகுத்து வந்தபடியே இருந்தன. அந்தவகையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், பி.கே.சேகர் பாபு, சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, தா.மோ.அன் பரசன், கீதா ஜீவன், மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் அடுத் தடுத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்து சென்றனர்.

அதேபோல நாடாளுமன்ற உறுப் பினர் தமிழச்சி தங்கபாண்டியன், என்.ஆர்.இளங்கோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட் டோரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க  வந்தனர். தி.மு.க. மாநில-மாவட்ட நிர்வாகிகள் சிலரும்  வந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டது.

அமலாக்கத்துறையின் நடவடிக் கைக்கு உட்பட்டவர் என்பதால், அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கு முன்பாக துப்பாக்கி ஏந்திய அதிவிரைவுப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். 

அமைச்சர்கள் தவிர வேறு யாரை யுமே அவர்கள் வார்டுக்குள் அனுமதிக்க வில்லை. அதேபோல மருத்துவமனை நுழைவுவாயில் முன்பும், தீவிர சிகிச்சைப் பிரிவு (அய்.சி.யூ.) வார்டுக்கு முன்பாகவும் அதி விரைவுப் படையினர் நிறுத்தப்பட்டனர்.

No comments:

Post a Comment