தனியார் நிறுவனங்களில் பணியாற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

தனியார் நிறுவனங்களில் பணியாற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன் 12 ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் 

‘நான் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (10.6.2023) நடைபெற்றது. இந்த முகாமில் மாநில அளவில் தேர்வு செய்யப் பட்ட 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் பின்னர் அவர் பேசியது:

 கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்குத் தகுதியான வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களுக்காக இதுவரை நடத்தப் பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் பொறியியல் கல்லூரிகளில் 64,943 பேர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 78,196 பேர் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த மாதம் இறுதிவரை இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும் என்றார் அவர்.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் செயின்ட் கோபின், மைக்ரோ சாப், மிஸ்டர் கூப்பர், டெக் மகேந்திரா, ஆதித்யா பிர்லா, பைஜீஸ், பிளிப்காட், ஹெச்டிஎப்சி, இந்தியா சிமென்ட்ஸ், பாக்ஸ் கான், முத்தூட் பைனான்ஸ், சுதர்லேன்ட், ஸ்டார்ஹெல்த் போன்ற முன்னணி நிறுவனங்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். 

நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைச் செயலர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, ‘நான் முதல்வன்’ திட்ட முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் ஜெய பிரகாசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment