ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவதென விருதுநகர், இராசபாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவதென விருதுநகர், இராசபாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

சிவகாசி,மே30 - சிவகாசி வானவில் வளாகத்தில் 28.5.2023 அன்று காலை 10 மணியளவில்  விருதுநகர், இராசபாளையம் மாவட்டக்  கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் தலைமையில், தலைவர் கா.நல்ல தம்பி, இராசபாளையம் மாவட்டத் தலைவர் பூ.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில், தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி கழ கச் செயல்திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்ட அமைப் பாளர் வெ.முரளி, இளைஞரணித் தலைவர் இரு.அழகர், இராச பாளையம் நகரச் செயலாளர் பாண்டிமுருகன், சிவகாசி நகரத் தலைவர் மா.முருகன், அமைப் பாளர் பெ.கண்ணன், இளைஞரணி அமைப்பாளர் ஜீவா முனீஸ்வரன், திருத்தங்கல் நகர அமைப்பாளர் மா.நல்லவன், அருப்புக்கோட்டை நகர இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர் மற்றும் தோழர்கள் கழகப் பணிகள் குறித்து உரையாற்றினர். 

மொழிக் காவலர் ஓவியர் சிவ காசி மணியம், பெரியார் பெருந் தகையாளர் ம.சிவஞானம், விருது நகர் சுயமரியாதைச் சுடரொளி அ.வெங்கடாசலபதியின் இணையர் விஜயரத்தினம் ஆகி யோரது மறைவிற்கு ஆழ்ந்த இரங் கலுடன் வீரவணக்கம் செலுத் தினர். 

ஈரோடு பொதுக்குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. மாவட் டத்தில் கிளைகள் தோறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் மாணவர்கள், இளைஞர் களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. ஜூலை 1 இல், விருதுநகரில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் தமிழின இரட்சகர் காமராசர் 121 ஆவது பிறந்த நாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா என முப்பெரும் விழாவாக எழுச்சி யுடன் சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த “ஏ.வி.பி.ஆசைத்தம்பி மாளிகை” பெயர்ப் பலகையினை மீண்டும் அமைத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதென தீர்மா னிக்கப்பட்டது.

இயக்க இதழ்கள் சந்தாச் சேர்க்கையினை தொடர்ந்து தொய்வில்லாது செய்வதென தீர் மானிக்கப்பட்டது. சிவகாசி பெரி யார் மய்யப் பணிகளை விரைவு படுத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

நிறைவாக இராசபாளையம் மாவட்டச் செயலாளர் இரா.கோவிந் தன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment