பெரியார், அம்பேத்கர் பெயரில் விருதுகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

பெரியார், அம்பேத்கர் பெயரில் விருதுகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியது

சென்னை, மே 29 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள் பட 7 பேருக்கு விருதை தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 17ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (28.5.2023) மாலை நடந்தது. விழாவுக்கு கட்சி தலைவர்  மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமை தாங் கினார். பொதுச்செயலாளர்கள் சிந் தனைசெல்வன், ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி (சட்டமன்ற உறுப் பினர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர்கள் செல்ல துரை, வி.கோ.ஆதவன் உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவுக்கு விருது

விழாவில் சட்டப் பேரவைத் தலை வர் மு.அப்பாவுவுக்கு காமராஜர் கதிர் விருதை திருமாவளவன் வழங்கினார். விருதுடன் பாராட்டு பட்டயம், நினைவு கேடயம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

அதேபோல, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச் சாரியாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது, டில்லி மேனாள் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா வுக்கு பெரியார் ஒளி விருதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், பெங்களூரு சட்ட பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் மோகன் கோபாலுக்கு காயிதே மில்லத் பிறை விருதும், தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கு செம் மொழி ஞாயிறு விருதும் வழங்கப் பட்டன.

அத்துடன் பாராட்டு பட்டயம், நினைவு கேடயம் மற்றும் ரூ.50 ஆயிரமும் விருதாளர்களுக்கு வழங்கப் பட்டது. இதில் மோகன் கோபாலுக்கு பதிலாக அவரது நண்பர் விஞ்ஞானி முருகன் பெற்றுக்கொண்டார்.

பறையடித்த சட்டமன்ற உறுப்பினர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழாவில் பறை யடித்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்ன தாக கலைஞர்கள் பறை இசைக் கருவிக ளுடன் ஒத்திகையில் ஈடுபட்டு கொண் டிருந்தனர்.

அப்போது நிகழ்ச்சிக்கு வந்த சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கலைஞர்களுடன் இணைந்து தானும் பறையடித்து மகிழ்ந்தார். பறையடித்து மகிழ்ந்ததை பலர் தங்களது அலைபேசியில் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட் டனர்.

விழாவில் கலந்துகொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னம் பதித்த 'டி-சர்ட்' வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment