ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வாம்

உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு


புதுடில்லி, மே 6 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கருநாடக மாநிலம் கோலாரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோ ருடன் பிரதமர் மோடியையும் சேர்த்து அவதூறாகப் பேசினார்.

இது தொடர்பாக குஜராத் மாநில மேனாள் அமைச்சரும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரு மான புர்னேஷ் மோடி தொடுத்த வழக்கை சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா விசாரித்து, ராகு லுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார். கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியான இந்தத் தீர்ப்பினால் ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் குஜராத்தில் சூரத் மாவட்ட தலைமை குற்ற வியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வர்மாவுக்கு செசன்ஸ் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 பேரின் பதவி உயர்வையும் எதிர்த்து சிவில் நீதிபதிகளான ரவிகுமார் மேத்தா, சச்சின் பிரதபிரயா மேத்தா ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள் ளனர். 

இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் 8.5.2023 அன்று விசாரணைக்கு வருகிறது.


No comments:

Post a Comment