கருநாடக மாநிலம் - சித்தராமையா பதவி ஏற்பு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட ஆறு முதலமைச்சர்கள் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

கருநாடக மாநிலம் - சித்தராமையா பதவி ஏற்பு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட ஆறு முதலமைச்சர்கள் பங்கேற்பு

பெங்களூரு, மே 21  பெங்களூருவில் நேற்று (20.5.2023) நடைபெற்ற  விழாவில் கருநாடக மாநிலத்தின் 24-ஆவது முதல் வராக பதவியேற்றார் சித்தராமையா. துணை முதலமைச்சராக    டிகே சிவகுமார் பதவியேற்றார். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்ச ராகவும், துணை முதலமைச்சராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும்  பதவி ஏற் றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங் களூரு கன்டீரவா அரங்கில் நேற்று (20.5.2023) கோலாகலமாக நடைபெற்றது.

முதலில், முதலமைச்சராக சித்த ராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து, அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ் வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார் கேவின் மகன் பிரியங்க்    கார்கே,   ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது  ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற் றார்கள். அவர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற சித் தராமையா கருநாடகாவின் 24-ஆவது முதலமைச்சர் ஆவார். 

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன் னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர்கள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு (இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன் (ஜார்க் கண்ட்), பீகார் துணை முதல மைச்சர் தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   முக்கிய தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மைதானத்தின் நடுவில் சுமார் 40 ஆயிரம் இருக்கைகளும், மைதானத்தின் கேலரியில் பொதுமக்களுக்கான இருக் கைகளும் போடப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத் திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல். இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளி பரப்பு செய்யப்பட்டன.  

பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித் தராமையா, பெங்களூரு விதானசவுதா வில் (சட்டமன்றம்) உள்ள முதல மைச்சர் அறைக்கு சென்றார். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா அரங்கை சுற்றி யுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 

விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


No comments:

Post a Comment