ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் இந்தியாவிலும் இந்நிலை வரவேண்டும்: முதலமைச்சர் விருப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் இந்தியாவிலும் இந்நிலை வரவேண்டும்: முதலமைச்சர் விருப்பம்

சென்னை,மே29 - தமிழ்நாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில் லியன் டாலர் அளவுக்கு பொருளா தாரத்தை உயர்த்தும் நோக்கில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர்-ஜப்பான் சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் 2 நாட்கள் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தொழில் அதிபர்களை சந்தித்து புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண் டார். 

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங் கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதன் பிறகு ஜப்பான் நாட்டுக்கு சென்ற அவர் அங்குள்ள ஒசாகா நகரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.

அந்நாட்டு தொழிற்சாலைக ளையும் சென்று பார்வையிட்டார். ஜப்பான் தொழில் அதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்ட அவர் அங்குள்ள தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறும் அழைப்பு விடுத்தார்.

சென்னையின் உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஜப்பானில் வாழும் தமிழர்களையும் சந்தித்து பேசினார். அங்கு நடைபெற்ற கலாசார நிகழ்ச்சி களிலும் பங்கேற்றார்.

ஒசாகா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ நகருக்கு செல்ல புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

இதற்காக ரயில் நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங் குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் புல்லட் ரயிலில் பயணம் செய்து டோக்கியோ சென்றடைந்தார்.

தனது புல்லட் ரயில் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது:- ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல் லட் ரெயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண் டரை மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோம்.

உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில் களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன் பாட்டுக்கு வர வேண்டும். 

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்.

-இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார். 

No comments:

Post a Comment