கூகுளுக்கு 'வாழ்த்துகள்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

கூகுளுக்கு 'வாழ்த்துகள்'

இதுவரைக்கும் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 375 கோடி இருக்கும்.

ஒரு நோட்டு அச்சடிக்க ஆன செலவு மட்டும் சராசரியாக 4 ரூபாய்..

ஆக மொத்தம் அச்சடிக்கிற செலவு மட்டும் 1500 கோடி ரூபாய்.

இந்த நீளமான நோட்டை ஏடிஎம் மெசின்களில் அடுக்க முடியாததால் மெசின்களை மாற்றியமைக்க வேண்டி இருந்தது.

நாட்டில் ஏடிஎம்கள் எண்ணிக்கை அப்போது சுமார் 2 இலட்சம்.

ஒரு ஏடிஎம்மின் விலை சராசரியாக 7 இலட்சம் ரூபாய்.

மாற்றியமைக்க ஏடிஎம் விலையில் 10% ஆனது என்றால் மொத்த செலவு, கிட்டத்தட்ட ரூ.1400 கோடி.

இது போக 15 இலட்சம் பொதுத் துறை, தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு பயிற்சிக்கான செலவு,

375 கோடி நோட்டுகளை நாடு முழுக்க லாரிகளில் கொண்டு சென்று விநியோகிக்க ஆன செலவு,

எல்லாவற்றையும் சேர்த்தால்,

2000 ரூபாய் நோட்டுகளை அவசர கோலத்தில் அறிமுகப்படுத்தி, இப்போது திரும்பப் பெற்ற, கோமாளித் தனத்தினால்

ஆன மொத்த தண்டச் செலவு

5000 கோடி ரூபாயைத் தாண்டும்!

இது போக கள்ள நோட்டு ஒழிப்பு, கருப்புப் பண ஒழிப்பு, மின்னணு வர்த்தகப்  பரவலாக்கம் என எல்லா குறிக்கோள்களிலும் முற்று முழுவதுமாகத் தோற்ற, இந்திய நாட்டின் வரலாற்றிலேயே, மனிதனால் நிகழ்த்தப்பட்ட ஆகப் பெரிய பொருளாதார பேரழிவுத் தாக்குதலே பண மதிப்பிழப்புமாகும்.

பொருளாதாரம் 1.5% சுருங்கியதால், ஆண்டு ஒன்றுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு மட்டும்

2,50,000,00,00,000 (இரண்ரை இலட்சம் கோடி) ரூபாய்!

அதனால் ஏற்பட்ட வேலை வாய்ப்பு இழந்தவர்கள் 15,00,000

(அதே பதினைந்து இலட்சம்!)

உயிரிழப்பு நூற்றுக்கு மேல்!

இந்த, பொருளாதார அறிவு - அறவே இல்லாதவர்களிடம் இந்தியாவின்  ஆட்சி அதிகாரத்தை இன்னும் ஓர் அய்ந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கொடுத்தால்...

இந்தியா என்பது இந்து ராஷ்டிரம் - பஞ்சம், பட்டினி,  கலவரம், வன்முறை, சாவு நிறைந்த சுடுகாடாகவே இருக்கும்!

இதற்குக் காரணமானவர்களை நாகரிகக் கோமாளிகள் என்று விமர்சித்த கூகுள் நிறுவனத்திற்கு நன்றி!

- இணையத்திலிருந்து...


No comments:

Post a Comment