விவசாயம் - சிறு - குறு தொழில்களுக்கு சேவை அதிகரிப்பு இந்தியன் வங்கி நிருவாக இயக்குநர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

விவசாயம் - சிறு - குறு தொழில்களுக்கு சேவை அதிகரிப்பு இந்தியன் வங்கி நிருவாக இயக்குநர் தகவல்

 சென்னை, மே 10 -  வேளாண்மை துறை வளர்ச்சிக் காக விவசாயம் மற்றும் சிறு - குறு தொழில்துறைக்கு நிதி சேவை அளிப்பதை அதிகரித்துள்ளோம் என இந்தியன் வங்கியின் நிருவாக இயக்குநர் சாந்திலால் ஜெயின் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 31 - அன்று நிறைவுற்ற காலாண்டு மற்றும் நிறைவுற்ற ஆண்டிற்கான இந்தியன் வங்கி யின் நிதிநிலை குறித்த முடிவுகளை 8.5.2023 அன்று வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிதி ஆண்டின் 4ஆவது காலாண்டில் இந்தியன் வங்கி யின் நிகர லாபம் ரூ.1,447 கோடியாகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நிகர லாபம் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. சில்லறைக் கடன், விவசாயம் மற்றும் சிறு - குறு தொழில்களுக்கு கடன் வழங்குதல் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 23இல் இது ரூ.2,72,679 கோடி. மார்ச் 22இல் இது ரூ.2,42,700 கோடியாக இருந்தது.

கைப்பேசி மூலம் நடத்தப்படும் பரிமாற்றங்கள் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப் படையில் 72 சதவீதம் என்பதாக அதிகரித்து உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை 68 சத வீதமாகும்.

இவ்வங்கி சிறந்த முறையில் தகவல் பரிமாற்றத்திற்காக, " "CGTMSE Achievement Award FY23" விருதை ஏப்ரல் மாதம் வென்றது. இவ்வங்கியின் பணியாளர்கள் புத்தாக்கமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிதித் திட்டங்களின் முழு வரம்பையும் ஒரே தளத்தின் கீழ் வழங்குவதன் மூலமும், எங்களின் வாடிக்கையாளர்களை எப்போதும் வளர்ந்து வரும் நிதித்துறையில் செழிக்கச் செய்வதன் மூலமும் நம்பகமான கூட்டாளராக நாங்கள் இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment