ஆர்.என்.ரவி - ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்படுவதை திராவிட மண் ஏற்காது தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

ஆர்.என்.ரவி - ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்படுவதை திராவிட மண் ஏற்காது தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம்

சேலம்,மே10 - தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில அளவிலான முதல் ஆலோசனை கூட்டம், சேலம் மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் மாளிகையில், 8.5.2023 அன்று நடந்தது.

விளையாட்டு மேம்பாட்டு அணி யின் மாநிலச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., பொன்.கவுதமசிகாமணி எம்.பி., முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.

 இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

கலைஞரின் நூற்றாண்டு விழாவை, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், ஜூன் 1ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு மே மாதம் முடிய, மாநிலம் முழுவதும் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகளை நடத்துவது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்படுவதை திராவிட மண் எப்போதும் ஏற்றுக் கொள்ளாது.

திராவிடம் என்பது ஆதிக்கவாதி களுக்கு எரிச்சல் தரும் சொல்லாகும். திராவிடம் என்பது இந்திய ஒருமைப் பாட்டிற்கு எதிரான சொல் அல்ல. மாநில அரசின் கொள்கைக்கு எதிராக திராவிட மாடலை விமர்சனம் செய்து, வெறுப்பின் உச்சத்தில் பேசுகிறார் ஆளுநர் ரவி.

திராவிட மாடலை எதிர்த்து விமர் சனம் செய்வதும், அரசு நிகழ்ச்சிகளில் சனாதானத்தை ஆதரித்து பேசுவதும், பொதுவெளியில் தமிழ்நாடு அரசினை தொடர்ந்து தேவையற்ற முறையில் விமர்சிப்பதும் என, ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும் ஆளுநர் ரவியை வன்மையாக கண்டிப்பது.

அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் ஏழை, எளிய நிலையில் உள்ள தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை, கலைஞரின் பெயரில் சென்னை கிண்டியில் பல்நோக்கு மருத் துவமனை அமைத்தது, தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 மாவட்ட விளை யாட்டு அரங்குகளில் மாற்றுத் திற னாளிகளுக்கு பிரத்யேக பாரா விளை யாட்டு அரங்கங்கள் அமைத்த முதல மைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில், மேனாள் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு, அமைச்சர் கே.என்.நேரு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்தனர்.

கூட்டத்தில் விளையாட்டு மேம் பாட்டு அணி மாநிலச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘கடந்த 6 மாதத் திற்கு முன்பு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி தொடங்கப்பட்டது.

தற்போது அகில இந்திய அளவில் பெண்கள் கூடைப்பந்து போட்டியை, சேலத்தில் நடத்தியுள்ளோம். கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சியின் சாத னைகளையும், சிறப்புகளையும் நாம் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்டவர் களையும், விளையாட்டின் மூலம் இணைத்து, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி, திருச்சியில் விரைவில் மிகப் பெரிய அளவில் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ் வொரு மாவட்டத்திலும் விளை யாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியில் இல்லாதவர்களை எல் லாம், விளையாட்டு மூலமாக தி.மு.க.வில் சேர்க்கும் போது நாம் மகத்தான வெற்றி பெற வாய்ப்புள்ளது,’’ என்றார்.

No comments:

Post a Comment