அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாசிங்டன், மே 3- கடந்த ஆண்டில் அமெரிக்காவில் கல்வி பயின்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே வேளையில், சீன மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை அமெரிக்க குடியேற்ற-வர்த்தக அமைப்பு சேகரித்தது. அந்த அமைப்பு வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவுக்கு மாணவர் களை அதிக எண்ணிக்கையில் அனுப்பும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ஆம் ஆண் டில் 64,300 இந்திய மாணவர்கள் கூடுதலாக அமெரிக்காவில் கல்வி பயின்றனர். அதே கால கட்டத்தில் சீன மாணவர்களின் எண்ணிக்கை 24,796-ஆக குறைந்தது. அதேபோல், சவூதி அரே பியா, குவைத், மலேசியா நாடு களைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் அமெரிக்க பள்ளிகளில் இணைந்த வெளி நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 7.8 சதவீதம் அதிகரித் தது. அந்த எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 3,887 அதிக மாக இருந்தது. அமெரிக்காவின் 4 பிராந்தியங்களிலும் வெளி நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் கலிஃபோர் னியா மாகாணத்தில் மட்டும் 2,25,173 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்றனர். 

இது அமெரிக்காவில் பயின்ற ஒட்டுமொத்த வெளிநாட்டு மாணவர்களில் 16.5 சதவீதம் ஆகும். மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 46 சதவீதத்தினர் இந்தியாவையும் சீனாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 70 சதவீதம் பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment