போக்குவரத்துப் பணியாளர் தேர்வுக்கு புதிய மென்பொருள் - அமைச்சர் சா.சி. சிவசங்கர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

போக்குவரத்துப் பணியாளர் தேர்வுக்கு புதிய மென்பொருள் - அமைச்சர் சா.சி. சிவசங்கர் தகவல்

சென்னை,மே10 - தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் காலி யாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை  அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அதாவது, போக்குவரத்து பணி யாளர்கள் தேர்வுக்காக, இணைய வழியில் விண்ணப்பங்களை பெறு வதற்காக, தகவல் தொழில் நுட்பத் துறை உதவியுடன் புதிய சாப்ட் வேர் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நிய மனம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல் முறை யாக தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம், போக்குவரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகத்தில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையை திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடிக்கப் படாத, 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை, தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, முடிக்கப் பட்டுள்ளது.

ஊதிய விகிதம் குறைக்கப்பட்டு, சீனியர், ஜூனியர் என்கிற பாகுபாடு இல்லாமல், ஒரே ஊதிய விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்க ஒப்பந்தப் பணிகள் நடந்து வருகிறது. 

போக்குவரத்து தொழிலா ளர்கள் சிலர், முறையாக விடுப்பு எடுக்காமல், தொடர் விடுமுறை யில் சென்று விடுகிறார்கள். முறை யான தகவல் இல்லாத சூழலில், பேருந்துகளை இயக்குவதில் சிர மம் உள்ளது. எனவே, அதைப் பூர்த்தி செய்ய அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் நிலை உள்ளது. 

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் யாரும் புதிதாக பணியமர்த்தப் படவில்லை. தற்போது பணியா ளர்கள் தேர்வுக்காக, இணைய வழியில் விண்ணப்பங்களை பெறு வதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் புதிய மென் பொருள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நிய மனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment