"வைக்கம் போராட்ட நூற்றாண்டு" கருத்தரங்கம் நடத்த முடிவு: புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

"வைக்கம் போராட்ட நூற்றாண்டு" கருத்தரங்கம் நடத்த முடிவு: புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

 புதுச்சேரி, வில்லியனூர், பாகூர், அரியாங்குப்பம், சேதராப்பட்டு, கொம்பாக்கம், ஏம்பலம் ஆகிய பகுதிகளில்  "வைக்கம் போராட்ட நூற்றாண்டு" கருத்தரங்கம்  நடத்த முடிவு: புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

புதுச்சேரி,மே25- புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 24-5-2023 மாலை புதுச்சேரி ராசா நகர் பெரியார் படிப்பகத்தில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் கி.அறிவழகன் கடவுள் மறுப்பு வாசகத்தை கூறினார்.

திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் மானமிகு சிவ.வீர மணி தலைமை ஏற்று ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி பேசினார். மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தொடக்க உரை நிகழ்த்தி கலந்து ரையாடல் கூட்டத்தின் நோக்கங் களை விளக் கிப் பேசினார்.

 தொடர்ந்து கழகத் தோழர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். பொதுக்குழு தீர்மானங் களின் படி புதுச்சேரி மாநில த்தில் கிராம பகுதிகளில் வைக்கம் நூற் றாண்டு விழா , கிராம பிரச்சாரம் கூட்டம், கழகத்தில் புதிய உறுப் பினர் சேர்த்தல் ஆகிய பணிகளை தீவிரப்படுத்தி செயலாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம்1:

அண்மையில் கால மான பெரி யார் பெருந்தொண்டர் ஜி.கே.எம். என்று அழைக்கப்படும் ஜி. கிருஷ் ணமூர்த்தி அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப் பட்டது. 

தீர்மானம்2:

ஈரோட்டில் நடைபெற்ற திரா விடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் தீர்மானத்தின்படி புதுச் சேரியில் அதனை முழு வீச்சில் செயல்படுத்துவதெனவும் அதன் ஒரு பகுதியாக "வைக்கம் போராட்ட நூற்றாண்டு" கருத் தரங்கம் புதுச்சேரி, வில்லி யனூர், பாகூர், அரியாங்குப்பம், சேதுராப் பட்டு,கொம்பாக்கம், ஏம்பலம் ஆகிய ஏழு பகுதிகளில் சிறப்பாக நடத்துவது.

தீர்மானம்3:

அண்மையில் நடைபெற்ற "தமிழர் தலைவர் "கலந்து கொண்ட பொதுக் கூட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சி களின் வரவு-செலவுகள் சரிபார்க்கப் பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தீர்மானம்4:

குலக்கல்வி திட்டத்தை மறை முகமாக கொண்டு வர திட்டமிடும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை புதுவை மாநி லத்தில் நடைமுறைப்படுத்தி ஒடுக்கப் பட்ட மக்களின் உயர்கல்வி கனவை தகர்த்தெறிந்துள்ள புதுவை அரசை வன்மையாக கண்டிக்கிறோம் 

தீர்மானம்5:

 புதுவை மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இது குறித்து உயர்மட்ட விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் மேலும் அரசு பள்ளி மாணவர் களின் தேர்ச்சி விகிதங்களை அதிக மாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசாங் கத்தை வலியுறுத்துகிறோம்.

தீர்மானம்6: 

வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில அரசுகளை பாராட்டுவது என்றும் புதுச்சேரி அரசும் அதனை பின்பற்றி "வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழாவை" புதுவை மாநிலத்தில் நடத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம்7:

புதுச்சேரிக்கு தனி மாநிலத் தகுதி வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றிய முதலமைச்சர் ந.ரங்க சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி விரைந்து தனி மாநிலத் தகுதி பெற நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம்8: 

புதுவை மாநிலத்தில் பொறியியல் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த இளைஞர்களுக்கு எந்த விதமான வேலை வாய்ப்பும் இல்லை, எனவே வேலை வாய்ப் பினை உருவாக்கி தரும் தனியார் தொழிற் சாலைகளை புதுவைக்கு கொண்டு வருதல் மற்றும் 20 ஆயிரம் அரசின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

மற்ற மாநிலங்களில் உள்ளது போல் புதுவை மாநிலத்திலும் புதுச்சேரி "பணியாளர்கள் தேர்வு ஆணையம்" தனியாக உருவாக்கி புதுவை மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு கதவினை திறக்க வேண்டும் என புதுவை அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 9: 

எங்களின் கோரிக்கையை ஏற்று  புதுச்சேரியில் அமைந்துள்ள "பெரியார் படிப்பகம் மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆய்வு நூலகம்" ஆகியவற்றை சீரமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை மேற் கொண்டதற்கு திராவிடர் கழகத் தின் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

தீர்மானம்10:

விடுதலை, உண்மை ஆகிய கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நலன் விரும்பிகள் கொண்ட பட்டியல்கள் தயாரிப்பு மேற்கொள்ளுதல்.

தீர்மானம்11:

புதுச்சேரி துணைநிலை ஆளு நர் அண்மையில் அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டமான பெண்களுக்கு "வெள்ளிக்கிழமை விரத" இரண்டு மணி நேர விடு முறை என்ற திட்டத்தை உடனடி யாக கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

தீர்மானம்12:

குற்றாலத்தில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் புதுவை யில் இருந்து தோழர்கள் கலந்து கொள்வதெனவும் அதற்கு ஒருங் கிணைப்பாளராக புதுச்சேரி இளைஞரணி தலைவர் தி.இராசா விற்கு பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.

இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் மு. குப்புசாமி நன்றி தெரிவித்தார்.

கலந்துரை யாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் கு.இரஞ்சித் குமார், பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் இளவரசி சங்கர்.மாவட்ட காப் பாளர் இர. சடகோபன், மாவட்ட அமைப் பாளர் இர.இராசு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், பகுத்தறி வாளர் கழகத் தலைவர் நெ.நட ராஜன், இளைஞரணி தலைவர் தி.இராசா, தோழர்கள் தா.சக்திவேல், மு.ஆறுமுகம், இரா.ஆதி நாராயணன், ஆ.சிவராசன், செ.க.பாட்ஷா, பே.ஆதிநாரா யணன், மருத்துவர் ச.முகேஷ், கு.உலகநாதன், மாணவிகள் சர் மிளா பானு, கரிஷ்மா பானு, செ.இளங்கோவன் மற்றும் தோழர் கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment