ஜாதி மதவாதிகளுக்கு 'திராவிட மாடல்' புரியாது ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

ஜாதி மதவாதிகளுக்கு 'திராவிட மாடல்' புரியாது ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

சென்னை, மே 7 மக்களை ஜாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்து பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் புரியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, நேற்று (6.5.2023)  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை கள், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட் டத்தின் கீழ் உயர் கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மக்கள் வைத்திருக்கும் நம் பிக்கை "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" உங்களால் மறக்க முடியாத குரல் இது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழ்நாட்டு மக்களாகிய உங்களு டைய அன்போடு, ஆதரவோடு முதல்-அமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன். மக்கள் வைத்திருக்கும் நம்பிக் கையை நிறைவேற்ற முடியுமா?, எடுத்துக் கொண்ட பணியை முடித்துக்காட்ட முடி யுமா? என்று என்னை நானே கேட்டுக் கொண்டபோது, என் மனதிற்கு தெம்பும், தைரியமும் கொடுத்தவர்கள் 3 பேர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். 

தன்னம்பிக்கை - தைரியம் 

இவர்கள் 3 பேரையும் மனதில் நினைத்துப் பார்த்தேன். அவர்களோடு அம்பேத்கர், காமராஜர், ஜீவானந்தம், காயிதேமில்லத் உள்ளிட்டவர்களும் என் மனதில் தோன்றி னார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றிக்காட்ட முடியும் என்ற தன்னம் பிக்கையும், தைரியமும் தானாக எனக்கு வந்துவிட்டது. மக்களுக்காக பணியாற்றுவது என்பது எனக்கு புதிதல்ல. பிறந்து வளர்ந்ததே பொது வாழ்க்கையுடைய அத்தனை தன்மை களையும் எதிர்கொண்ட கோபாலபுரம் வீட்டில்தான். சிறுவனாக, இளைஞனாக வளர்ந்தபோதே திராவிட இயக்கத்துக்கு என்னை ஒப்படைத்துக்கொண்டு, தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருடைய கட்ட ளையை மீறாமல் பணியாற்றி வந்திருக்கிறேன். 

திராவிட இயக்கம் 

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கிறேன், பல சோதனைகளை நான் சந்தித்திருக்கிறேன். "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்றார் அண்ணா. "இதையும் தாங்கிப் பழகு" என்று எனக்கு கற்றுக்கொடுத்தார் தலைவர் கலைஞர். தன்னை தாக்குபவர்களையும் தாங்கி நிற்கிற நிலம் போன்றது நம்முடைய திராவிட இயக்கம். அதனால்தான், சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றிபெற்று, அந்த வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டு தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருடைய ஓய்விடத் திற்கு சென்று அங்கே அதை காணிக்கையாக்கி, அப்போது நான் சொன்னேன், "எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக் களிக்காதவர்களுக்கும் சேர்த்து செயல்படக் கூடிய அரசாக எங்கள் அரசு இருக்கும்" என்று. மனதிற்கு நிம்மதி தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும்தான் நான் முதல்-அமைச்சர். இது தமிழ்நாட்டு மக்கள் தந்த பொறுப்பு. அவர்களுக்காக பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை. என்னால் முடிந்த அளவு பணியாற்றுகிறேன், ஓய்வின்றி பணியாற்றுகிறேன், என் சக்திக்கு மீறி பணி யாற்றுகிறேன். அந்த உழைப்பின் பயனை தமிழ்நாட்டு மக்களான உங்களுடைய முகங்களில் பார்க்கிறேன். நீங்கள் பேசுகிற வார்த்தைகளில் கவனிக்கிறேன். நீங்கள் காட்டுகின்ற அன்பில் கரைகிறேன். நீங்கள் என்னை நம்பி ஒப்படைத்த பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது என் மனதிற்கு நிம்மதியை தருகிறது. இந்த 2 ஆண்டுகளில் நம்முடைய அரசு நிறைவேற்றிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் இங்கே பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையும் உதட்டில் இருந்து வரவில்லை, அவர்க ளுடைய இதயத்தில் இருந்து வருகிறது. 

திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கிறவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மகிழ்ச்சியும், உங்களுடைய புன்னகையுமே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. 

திராவிட மாடல் புரியாது 

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திருக்குறள் சொல்கிறது. 'எல்லாருக்கும் எல்லாம்' என்று சொல்வது திராவிட மாடல். மக்களை ஜாதியால், மதத்தால், அதிகாரத் தால், ஆணவத்தால் பிரித்து பார்க்கிறவர் களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சியில் உட்கார வைத்த மக்களுக்கு, அறி வார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது நன்றாக புரியும். "மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவி யில் இருக்கின்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம் கடமையை செய்தால் போதும் என்கிற குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன்." பெரும்பாலான கோரிக்கை நிறைவேற்றம் சொன்னதைச் செய்வதுதான் திராவிட மாடல். 

மனு கொடுத்தவர்கள்

எங்களுக்கு வாக்களித்தவர்களா?, வாக் களிக்காதவர்களா? என்று பிரித்துப் பார்க்க வில்லை. தி.மு.க. ஜெயித்த தொகுதியா?, தோற்ற தொகுதியா? என்று பார்க்கவில்லை. பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றி இருக்கிறோம். செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது, 2 ஆண்டு காலமாக ஏழை மக்களின் நலன் காக்கக்கூடிய குடியிருப்பாக மாறியிருக்கிறது. தலைமைச்செயலகம் என்பது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்ற உழைக்கும் முதன்மை செயலகமாக மாறியிருக்கிறது. ஆட்சியின் முகம் இந்த ஆட்சி யின் முகம் என்பது அதிகார முகம் அல்ல, அன்பு. இந்த ஆட்சியின் முகம் என்பது ஆணவம் அல்ல, ஜனநாயகம். இந்த ஆட்சியின் முகம் என்பது அலங்காரமல்ல, எளிமை. இந்த ஆட்சியின் முகம் என்பது சர்வாதிகாரமல்ல, சமத்துவம். இந்த ஆட்சி யின் முகம் என்பது சனாதனமல்ல, சமூகநீதி. அதனால்தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது. நமது ஆட்சி என்பது சமூகநீதி, சமநீதி, சுயமரியாதை, சமதர்மம், சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்பாட்டின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கக்கூடிய ஆட்சி. 2 ஆண்டுகளை முடித்துவிட்டு, இப்போது 3-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் நன்மையை அடைந்திருக்கும் ஆட்சியாக நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது. 

மக்களின் மகிழ்ச்சி 

ஆண்-பெண், கிராமம்-நகரம், குழந்தைகள்-முதியோர் என எல்லா வகையிலும் எல்லா ருக்குமான வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படுவது நமது அரசு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார்அறிஞர்  அண்ணா. மக்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சி. விளிம்பு நிலை மக்களாக இருக்கிற இருளர் நரிக்குறவர் மக்களுக்கும் என்ன தேவை என்று கவனித்து எல்லா மாவட்டத் திலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அவர்களுடைய சுயமரி யாதையையும், மாண்பையும் நிலைநாட்டி இருக்கிறோம். அவர்களுடைய வீட்டிற்கே சென்று நான் காலை உணவு சாப்பிட்டேன். சாப்பிட்டபோது அந்த உணவு காரமாக இருந் தது.  ஆனால் அதைவிட அன்பு அதிக மாக இருந் தது, அந்த அன்புதான் இன்றைக்கு நம் அரசு இந்த பெயரை, இந்த சிறப்பை பெற்றிருக்கிறது. 

துறைகள்தோறும் சாதனை

மக்களுடைய முகத்தில் மகிழ்ச்சியை செயற்கையாக வர வைக்க முடியாது. இதயம் மகிழ்ந்தால்தான் இயற்கையாக முகமும் மலரும். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கோடிக்கணக்கான மக்களுடைய இதயத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் மலர்ச்சியும் நிறைந்திருக்கிறது. அதை, நான் ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிற போது கவனிக்கிறேன். எத்தனையோ திட்டங்களை மாவட்டம்தோறும் - நகரங்கள் தோறும் நாம் செய்து கொடுத்திருக்கிறோம். துறைகள்தோறும் சாதனைகளை செய்து காட்டி கொண்டிருக்கிறோம். சென்ற ஆட்சியில் சீரழிந்து கிடந்த அரசு, அந்த அரசினுடைய நிர்வாகம், அதை சீர்செய்ய பல்வேறு நடவடிக்கைகளை இன்றைக்கு நாம் எடுத்து வருகிறோம். தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் இதுநாள் வரை 350-க்கும் மேற்பட்ட துறை ரீதியான ஆய்வு கூட்டங்கள் நடந்து பல்வேறு பிரச் சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. 

2 ஆண்டு சாதனை 

ஆட்சி பொறுப்பேற்று இதுநாள் வரை 6,905 கோப்புகளில் கையெழுத்திட்டிருக் கிறேன். அதோடு நிற்கவில்லை. கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனித ருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட் டத்தைத் தொடங்கி இதுவரை 4 கட்டங்களில், 16 மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியிருக்கிறேன். இப்படி 2 ஆண்டு சாதனைகளை முழுவதுமாக சொல்லி முடிக்க வேண்டுமென்றால், இன்னும் 2 நாட்கள் நீங்கள் இங்கேயே தங்கி இருக்க வேண்டும். "சொன்னதைச் செய்வோம்-செய்வதைச் சொல்வோம்" என்பது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருடைய நடைமுறை. அப்படித்தான் ஆட்சி நடத்தினார். ஆனால் நமது திராவிட மாடல் அரசு, சொல்லாத தையும் செய்வோம் - சொல்லாமலும் செய் வோம் என்கிற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் விடியல் 

முதல்-அமைச்சராக நான் பொறுப் பேற்ற போது கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற தமிழ்நாட்டினுடைய பொருளாதார நிலைமை என்ன? அரசாங்க கஜானாவி னுடைய நிலைமை என்ன? அதை யெல்லாம் மாற்றி, இருண்டு கிடந்த தமிழ் நாட்டில் விடியலை உண்டாக்கி இருக்கிறோம். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ் நாட்டி னுடைய உரிமைகளை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறோம். வளமான தமிழ் நாட்டை - இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை- எல்லோ ருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழ்நாட்டை உரு வாக்கி விட முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்கிறது. உங்களில் ஒருவன் உங்களுடைய மகிழ்ச்சியும், வாழ்த் துகளும் நம்முடைய இலக்கை நோக்கி என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை முழு மையாக நிறைவேற்ற உழைப்பேன். உங்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன். ஆட்சியின் 5 ஆண்டுகளும் உங் களின் நலனுக்காக இருக்கும். அதன்பிறகும், உங்கள் ஆதரவோடு தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment