மோடியின் 3 நாள் 28 கிலோமீட்டர் ‘ரோடுஷோ' பிளாப்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 15, 2023

மோடியின் 3 நாள் 28 கிலோமீட்டர் ‘ரோடுஷோ' பிளாப்!

பெங்களுரு, மே 15 கருநாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் பிரதமரின் ‘ரோடு ஷோ' எனப்படும் பெங் களூரு நகரத்தில் 28 கிலோ மீட்டர் தூர ஊர் வலம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி யுள்ளது. 2 நாள் ‘ரோடு ஷோ'விற்காக சுமார் ரூ.4 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் மகாராட்டிரா கோவா வில் இருந்து இந்த ‘ரோடு ஷோ'விற்குக் கூட்டத்தை கூட்டுவதற்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்தனர். முக்கியமாக ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா, மேலை நாடுகளில் இருந்து கப்பலில் மலர்களை இறக்குமதி செய்தார் என்று உள்ளூர் அலைவரிசை ஒன்று கூறியிருந்தது. 

28 கிலோமீட்டர் ‘ரோடு ஷோ!'

தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு பிரதமர் மோடி 4 முறையும், அதன் பின்பு 11 முறையும் கருநாடகாவிற்குப் பயணம் செய்தார். ஒரு பிரதமர் என்பதையும் மறந்து மதச்சார்போடு 'ஜெய பஜ்ரங் பலி' (அனுமானுக்கு ஜே) போட் டார். மேலும் 28 கிலோ மீட்டர் பெங்களூரு நகரில் ‘ரோடு ஷோ' எனப்படும் சாலை ஊர்வலம் சென்றார். 

முக்கியமாகக் கடற்கரை கருநாடகாவில் மதவாதத்தை வளர்த்து அங்கு அனைத்துத் தொகுதிகளும் மகராட்டிர மாநில எல்லைக்கு அருகில் உள்ள தொகுதிகள் மற்றும் குடகு உள்ளிட்ட தெற்கு கருநாடகத்தில் இடங் களைப் பிடித்தால், கூடுதலாக தலைநகர் பெங் களூருவில் உள்ள தொகுதிகள் கிடைக் கும் பட்சத்தில் பெரும்பான்மையை நெருங்கி விடலாம் என்ற நப்பாசையில், பெங்களூரு நகர மக்களின் வாக்கைப் பெற ‘ரோடு ஷோ' நடத்தினார். சுமார் 8 டன் பூக்களால் பெங் களூருவில் முக்கிய சாலைகள் குப்பையாக காட்சியளித்தது.

ஆனால், பாஜக வலுவாக இருக்கும் தென் மேற்கு, மற்றும் மைசூரு, குடகு பகுதி யில் உள்ள மாவட்டங்களில் அனைத்துத் தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது, இது காங்கிரஸ்காரர்களே எதிர்பார்க் காத வெற்றி என்று கருநாடக நேர்தல் வல்லு நர்களால் கூறப்படுகிறது

இவர் ஏன் அடிக்கடி இங்கே வருகிறார்? இவர் கருநாடகாவிற்கு மட்டும் பிரதமரா? என்று கருநாடக மக்கள் தொலைக்காட்சி நேரலையில் கேட்கும் அளவிற்கு மோடி நடந்து கொண்டார். இந்நிலையில் மோடி ‘ரோடு ஷோ' நடத்திய அனைத்துத் தொகுதி களிலும் படுதோல்வியைச் சந்தித்தது பி.ஜே.பி.  


No comments:

Post a Comment