ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல் : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல் : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா

கொல்கத்தா, மே 21 நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் அனைத்தும் புழக் கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு பல் வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத் துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா   விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல.. அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித் துக்கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பின் போது நாம் எதிர்கொண்ட துன்பங்கள் மறக்க முடியாதவை. அந்த துன் பத்திற்கு காரணமானவர்களை மன்னிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment