சாராய வேட்டை : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 1,558 பேர் கைது; 1,842 வழக்குகள் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

சாராய வேட்டை : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 1,558 பேர் கைது; 1,842 வழக்குகள் பதிவு

சென்னை, மே16 -  கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்த சாராய வேட் டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளனர் என்று தமிழ்நாடு காவல் துறை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை வெளியிட் டுள்ள செய்தியில், ‘கடந்த இரண்டு நாட்களாக தமிழ் நாடு முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட் டன. கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட 16,493 மிவிதிலி பாட்டில்கள் கைப்பற் றப்பட்டது. மேலும் 128 லிட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கள்ளச் சாராயம் கடத்த பயன்படுத்தப் பட்ட ஒரு நான்கு சக்கர வாகனமும், 7 இரண்டு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டன.

இந்த 2023ஆம் ஆண்டு இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,713 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளனர்.

அதில் 4,534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றப்பட் டுள்ளது. அதேபோல் கள்ளச் சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட் டுள்ளது.

மேலும் கள்ளச் சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் அருந்தி யவர்களில் இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இது போன்று, செங் கல்பட்டு மாவட்டத்தில் அய்ந்து பேர் கள்ளச் சாராயம் அருந்தி மரணம் அடைந்துள்ளனர். மேலும், செங்கல் பட்டில் ஏழு பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

விழுப்புரம் சம்பவத்தில் 40 பேர் ஒண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். ஜிப்மர் மருத்துவ மனையில் ஒருவரும், புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து, "கள்ளச் சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண் டாம் எனப் பொதுமக் களைக் கேட்டுக் கொள் கிறேன். கள்ளச் சாரா யத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதனிடையே, கள்ளச் சாராய மரணங் களைத் தொடர்ந்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துறை கண்காணிப் பாளர் களை பணியிடை நீக்கம் செய்து முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

கள்ளச் சாராய வழக் குகள் சிபிசிஅய்டி-க்கு மாற் றம் செய்யப்பட் டுள்ளன. விழுப்புரம், செங்கல்பட்டு மது விலக்கு பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment