அதிமுக ஆட்சியில் சாலை போடாமலேயே சாலை போட்டதாக ரூ.1.82 கோடி ஊழல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

அதிமுக ஆட்சியில் சாலை போடாமலேயே சாலை போட்டதாக ரூ.1.82 கோடி ஊழல்

 கோவை,மே4 -   கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் சாலைகள் போடாமலே ரூ.1.82 கோடிக்கு சாலை போட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் 2019-2020இல் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 38, 39, 40, 44 ஆகிய வார்டுகளில் 16 சாலைகளை சீரமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணிகள் முடிவு பெற்றதாகவும், ரூ.1.82 கோடி பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சியின் எம். புத்தகத்தில் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

பீளமேடு, ஆவாரம்பாளையம், நல்லாம்பாளையம் பகுதிகளில் இந்த சாலைகள் அமைந்துள்ளன. சமூக அலுவலர்கள் இந்த 16 ரோடுகளை ஆய்வு செய்தபோது எந்த சாலையுமே சீரமைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் இந்த ஊழல் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், பணம் செலவு செய்யப் பட்டதாக சொல்லப்பட்ட சாலைகள் போடப்படவில்லை. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


No comments:

Post a Comment