வேங்கை வயல் வழக்கில் மரபணு சோதனை 10 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

வேங்கை வயல் வழக்கில் மரபணு சோதனை 10 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

புதுக்கோட்டை. மே 9-  புதுக் கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற் காக மேலும் 10 பேரிடம் நேற்று (8.5.2023) ரத்த மாதிரி சேகரிக்கப்பட் டது.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம் பவம் தமிழ்நாடு முழுவ தும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அமைப் புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன.

இந்நிலை யில், இந்த வழக்கு சிபிசிஅய்டி காவல்துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசா ரணை நடைபெற்று வரு கிறது.

விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு காவலருக்கு சென்னை யில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி சோதனை மேற் கொள்ளப்பட்டது.

வேங்கைவயல், இறை யூர் பகுதியில் இருந்து காவலர் உட்பட 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோ தனை செய்வதற்காக சிபிசிஅய்டி காவல்துறை சம்மன் அளித்திருந்தனர். இதில், காவலர் மற்றும் இறையூர் பகுதியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 3 பேரிடம் இருந்து மட்டும் புதுக் கோட்டை அரசு மருத் துவக் கல்லூரி மருத்து வமனையில் ரத்த மாதிரி களை சேகரித்து ஆய்வ கத்துக்கு அனுப்பி வைக் கப்பட்டது. வேங்கை வயலை சேர்ந்த 8 பேர் ரத்த மாதிரி கொடுக்க முன்வரவில்லை.

சிபிசிஅய்டி சம்மன்: 

அதன்பிறகு, டிஎன்ஏ பரிசோதனை மேற் கொள்ள வருமாறு அழைப்பு விடுத்து வேங்கை வயலைச் சேர்ந்த 2 பேர், இறையூர் பகுதியைச் சேர்ந்த 8 பேர் என மொத் தம் 10 பேருக்கு சிபிசிஅய்டி காவ லர்கள்  அண்மையில் அழைப்பாணை அளித் தனர். 

அதன்படி, 10 பேரி டம் இருந்தும் நேற்று (8.5.2023) ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment