ம.பி. பாஜக அரசு பெண்களை அவமதிப்பதா? காங்கிரஸ் கடுங்கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

ம.பி. பாஜக அரசு பெண்களை அவமதிப்பதா? காங்கிரஸ் கடுங்கண்டனம்

போபால், ஏப். 24- மத்திய பிரதேசத்தின் திந்தோரி மாவட்டத்தில் மாநில அரசால் நடத்தபட்ட ஏழை ஜோடிகளுக்கான திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்குத் கருத்தரிப்பு பரிசோதனை நடத் தப்பட்டு கர்ப்பமாக இருந்த 4 பெண்கள் திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சரின் திருமண உதவி திட்டத் தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஜோடிகளுக்கு ரூ.56,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. அட்சய திரு தியை தினத்தை முன்னிட்டு திந்தோரி மாவட்டத்தின் கடாசாரை நகரில் முதலமைச்சரின் திருமணத் திட்டத்தின் கீழ் 219 ஏழை ஜோடி களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி கடந்த 22.4.2023 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக மணப்பெண்களுக்கு கருத்தரிப்பு சோதனை நடத்தப் பட்டு கர்ப்பமாக இருந்த பெண்க ளுக்குத் திருமணத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா, ‘நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமக்களுக்கு ரத்தசோகை நோய்க்கான சோதனை நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந் தது. அந்த பரிசோதனைக்காகப் பணியிலிருந்த மருத்துவரிடம் தங் களின் மாதவிடாய் சிக்கல் குறித்து சில மணப்பெண்கள் தெரிவித் துள்ளனர். இதையடுத்து, குறிப் பிட்ட அந்த மணப்பெண்களுக்கு கருத்தரிப்பு சோதனை நடத்தப் பட்டது. அதில் 4 பெண்கள் கர்ப் பமாக இருந்தது தெரிய வந்தது. அவர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கருத்தரிப்பு சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் எந்த உத்தர வும் பிறப்பிக்கவில்லை’ என்றார்.

காங்கிரஸ் கண்டனம்

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும் மேனாள் முதலமைச் சருமான கமல்நாத் கூறுகையில், ‘விழாவில் 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி யின் உண்மைத்தன்மையை முதல மைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்க வேண்டும்.

இந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் யாருடைய உத்தரவின்பேரில் சோதனை நடத்தி மத்திய பிரதேச மகளிரை அவமதித்தார்கள்? முதலமைச் சரின் பார்வையில் மாநிலத்தின் ஏழை மற்றும் பழங்குடியின பெண் களுக்கு கண்ணியம் இல்லையா? இந்த விவகாரத்தில் முறையான உயர்மட்ட விசாரணை மேற் கொண்டு தவறிழைத்தவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண் டும்’ என்றார்.

No comments:

Post a Comment