நிலவில் இருந்து மண் எடுத்துவந்து கட்டடங்களுக்கு கலவைப் பொருளை உருவாக்கும் சீனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 16, 2023

நிலவில் இருந்து மண் எடுத்துவந்து கட்டடங்களுக்கு கலவைப் பொருளை உருவாக்கும் சீனா

ஷாங்காய், ஏப். 16-  நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடு கட்ட தேவையான செங்கல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பொருட்களை தயார் செய்யும் முயற்சி யில் சீனா இறங்கியுள்ளது. வுஹான் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆய்வாளர்கள் இன்னும் 10 ஆண்டுகளில் ஆய்வுக்காக நிலவில் தங்குவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான முயற்சிகளை செய்து வருவதாகக் கூறியுள் ளனர்.

இதற்கு தேவையான மண்ணை நிலவில் இருந்து எடுத்து வந்து ஆய்வு செய்ய இருப்பதா கவும் பூமிக்கு அருகா மையில் உள்ள நிலவின் மேற்பரப்பில் இருந்து மண் முதலியவை ஏற் கெனவே ஆய்வுக்கு உட்ப டுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

பூமியில் இருந்து தொலைவில் இருக்கும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொள் ளப்பட இருப்பதாகவும் தங்களின் இந்த முயற்சி 2028ஆம் ஆண்டு ஒரு முக்கிய கட்டத்தை எட் டும் என்று தெரிவித் துள்ளனர்.

100க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் அய்ந்து ஆண்டுகளில் நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணைக் கொண்டு செங்கல் செய்யும் முயற்சி வெற்றியடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்னும் 10 ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் நிலவில் தங்குவதற்கு தேவையான உள் கட்ட மைப்பு வசதி செய்யப் படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நிலவின் மேற்பகுதி யில் பல கோடி ஆண்டு களாக ஏற்பட்ட இயற்கை மாற்றங்கள் காரணமாக பல இடங்க ளில் மிகவும் நுணுக்க மான கனிமத் துகள்கள் பல கோடி டன்கள் கொட்டிக் கிடக்கிறது. 

இந்த கனிமங்களில் இருந்து சிமிண்ட், மணல், உள்ளிட்ட பல் வேறு கட்டுமானப் பொருட்கள் கட்ட முடியும்.

ஏற்கெனவே நாசா கடந்த 2017ஆம் ஆண்டு நிலவில் இருந்து கொண்டுவந்த மாதிரி களை ஆய்வு செய்து நில விற்குச் செல்லும் மனிதர் கள் தங்குவதற்கு பூமியில் இருந்து கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லத்  தேவை இல்லை. 

அங்கேயே அவை ஏராளம் உள்ளது. துருவப் பகுதிகளிலும் லாவா டுயூப் எனப்படும் அணைந்துபோன எரிமலைக் குழம்பு வந்த பாதைகளிலும் பனிக்கட்டி வடிவில் நீர் ஏராளம் உள்ளது.

இவற்றைக் கொண்டே அங்கு செல் லும் மனிதர்கள் தாரா ளமாக கட்டுமா னங் களை தங்களுக்கு ஏற்ப கதிரியக்க தாக்கம் இல் லாத கட்டடங் களைக் கட்டி வாழ முடியும் என்று கூறியிருந்தது. 

 அங்கு சென்று கட்டி வசிப்பது எல்லாம் பிறகு பார்ப்போம் கட்டுமானத்திற்கு தேவையான மணல் உள் ளிட்ட கனிமப் பொருட் கள் எடுப்பதால் ஆறு மற்றும் வளம் மிகுந்த பகுதிகளின் மேல் தளங் களில் சூழல் சீர் கேடு ஏற்படுகிறது. 

ஆகையால் எதிர் காலத்தில் நிலவில் இருந்தே க ட்டுமானப் பொருட்களைக் கொண்டு வருவோம் என்று சீனா தோளைத் தட்டி புறப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment