கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்

ராகுல் காந்தி அறிவிப்பு

பெங்களூரு, ஏப்.28 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் பெண் களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்  ராகுல் காந்தி. 

கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 3 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தட்சண கன்னடா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து   பிரச்சாரம் மேற் கொண்டார். உடுப்பியில் உள்ள கபு என்ற இடத்தில் மீனவர் அமைப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். 

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: கருநாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பல கோடிகளை செலவழித்து சட்டமன்ற உறுப் பினர்களை குதிரை பேரம் மூலம் வாங்கி இந்த ஆட்சி அமைக்கப் பட்டது. முதலமைச்சர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்கப்பட்ட தாக பாஜக சட்டமன்ற உறுப் பினர்களே கூறியுள்ளனர். அமைச்சர்கள் எந்த வேலை ஆக வேண்டும் என்றாலும் 40 சதவீ தம் கமிஷன் வாங்கினர். மக் களின் வரிப்பணத்தை பாஜக வினர் கல்வி, சுகாதாரத் தேவைக் காக பயன்படுத்தவில்லை. மாறாக அவர்களுடைய சில பணக்கார நண்பர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியுள்ளனர். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் பணம் மக்களைச் சென் றடைவதை உறுதி செய்வோம். எங்களின் ஆட்சியில் நிச்சயம் ஊழல் இருக்காது என உறுதி அளிக்கிறேன். காங்கிரஸ் ஆட் சிக்கு வந்ததும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரி இளை ஞர்களுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமோ பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,500 இரண்டு ஆண்டு களுக்கு வழங்கப்படும். மீனவர் களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடும் ரூ.1 லட்சம் வட்டியில்லா கடனும் வழங்கப்படும். மீன்பிடி படகுகளுக்கு ஒரு லிட்டர் டீச லுக்கு ரூ.25 மானியம் வழங்கப் படும். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத் தில் செயல்படுத்தப்படும். இவ் வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.


No comments:

Post a Comment