சிலைகளையும் நெருப்பையும் வழிபடுவதைத் தடை செய்தார் பசவண்ணா யாகம் செய்வதைக் கடுமையாக எதிர்த்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

சிலைகளையும் நெருப்பையும் வழிபடுவதைத் தடை செய்தார் பசவண்ணா யாகம் செய்வதைக் கடுமையாக எதிர்த்தார்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் பச வண்ணா நடத்திய புரட்சி இந்திய வர லாற்றில் தனித்துவமானது. புத்தருக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக மிகவும் வலுவான ஆன்மீக, சமூக மற்றும் மதக் கிளர்ச்சியைத் தொடங்கியவர் பசவண்ணா. 

பார்ப்பன குடும்பத்தில் பிறந்த பச வண்ணா, வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் உபநிடதங்களைக் கற்றுக் கொண்டார்.  பின்னர் ஜாதி மற்றும் வேதங்கள் இரண் டையும் நிராகரித்தார்.

பார்ப்பனர் அல்லாதோர் கோயில் நுழைவது தடைசெய்யப்பட்டதால், பச வண்ணா  சிலை வழிபாடு மற்றும் கோயில் நுழைவு இரண்டையும் தேவையில்லாத செயல்கள் என்று கூறினார். 

சொர்க்கம், நரகம், புண்ணியம், பாவம், மறுபிறப்பு, மோட்சம் போன்ற அனைத்தும் பார்ப்பனர்கள் உருவாக்கிய போலிக் கருத்துகள் ஆகும் என்று கூறினார்.  சடங்குகளில் விலங்குகள் பலியிடுவதையும், உணவுப்பொருட்களை படைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக கடுமையான எதிர்க்குரல் எழுப்பினார்.

900 ஆண்டுகளுக்கு முன்பே, பசவண்ணா ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தார். செருப்புத் தொழிலாளியான ஷீலவந்தான் மற்றும் பார்ப்பனப் பெண்ணான லாவண்யாவின் திருமணத்தை நடத்தி வைத்தார்.  பசவண்ணா கருநாடகத்தில் இன்றளவும் புகழப்படுகிறார்.

No comments:

Post a Comment