சீன லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பாதிப்பு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

சீன லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பாதிப்பு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஏப்.23- சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கடம்பூர்ராஜூ (கோவில்பட்டி), “தீப் பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக்லைட்டரை தடை செய்யவேண்டும். நலிந்து வரும் தீப்பெட்டி தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பர சன் பதில் அளித்து கூறிய தாவது:- தமிழ்நாட்டில் ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை களுக்கு பிரதான அச்சுறுத்தலாக விளங்கி வருவது பெட்ரோலிய எரிபொருள் நிரப்பிய பிளாஸ்டிக் லைட்டர்களாகும். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு லைட்ட ரானது 20 தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் அள விற்கு சமமான பயன்படுத் தும் திறன் உள்ளது.

இந்திய தீப்பெட்டி சந்தையில் சுமார் 20 சதவீதத் திற்கும் மேலாக லைட் டர்கள் ஆக்கிரமித்துள்ளன. இது தொடர்பாக சீனாவி லிருந்து இறக்குமதி செய் யப்படும் லைட்டர்களுக்கு தடை விதித்திட வேண்டி ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்ச ருக்கு கடிதம் அனுப்பப்பட் டுள்ளது. மேலும், தீப் பெட் டிக்கான மரக்கட்டைகள் இறக்குமதி செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளை களைந்திட வேண்டி ஒன்றிய அரசின் வர்த்தக செய லாளருக்கும் கடிதம் அனுப்பப்பட் டுள்ளது.

தமிழ்நாடு அரசு தீப்பெட்டி உற் பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஆகவே, சீன நாட்டிலி ருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களுக்கு தடை விதிக்க இந்த அரசு தொடர்ந்து நட வடிக்கை மேற்கொள்ளும்.

-இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment