ரூ. ஒன்றரை லட்சம் கோடியை கொள்ளையடித்த கருநாடக பிஜேபி அரசு பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

ரூ. ஒன்றரை லட்சம் கோடியை கொள்ளையடித்த கருநாடக பிஜேபி அரசு பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு

பெங்களூரு, ஏப். 26- கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி நேற்று (25.4.2023) சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- கருநாடகத்தில் 40 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. எந்த வெட்கமும் இல்லாமல் இந்த கமிஷன் அரசு உங்களிடம் (மக்களிடம்) கொள்ளையடிக்கிறது. 40 சதவீத கமிஷன் தர முடியாமல் ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார்.

கருநாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இதில் தவறு செய்தவர்கள் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பணம் சிக்கியது. இதுகுறித்து விசா ரணை நடத்துவதற்கு பதிலாக அந்த சட்டமன்ற உறுப் பினர் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்தினார்.

கருநாடகத்தில் பா.ஜனதா அரசு ரூ.1லு லட்சம் கோடி கொள்ளையடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தால் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மேற் கொண்டிருக்க முடியும். இதனால் மக்கள் பயன் அடைந்தி ருப்பார்கள்.

கருநாடகத்தில் தற்போது நடைபெறும் பா.ஜனதா அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பா.ஜனதா வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது. துரோகத்தின் பேரில் ஆட்சி அமைத்தனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த பா.ஜனதா அரசு எந்த பணிகளையும் செய்யவில்லை. கருநாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிகளை ஒன்றிய அரசு வழங்கவில்லை.

பா.ஜனதா தலைவர் ஒருவர், நீங்கள் பிரதமர் மோடி க்கு ஓட்டு போடாவிட்டால் மோடியின் ஆசி உங்களுக்கு கிடைக்காது என்று மிரட்டல் விடுக்கிறார். மோடியின் ஆசி வேண்டும் என்று கூறியது கருநாடகத்திற்கு இழைக்கப் பட்ட அவமானம் ஆகும். பிரதமர் மோடியின் நண்பர் அதானி, அம்பானி ஆகியோர் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

நிலத்தில் வியர்வை சிந்தும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,100 ஆக உயர்த்தி விட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. உங்களின் பணத்தை கொள்ளையடித்து தொழில் அதிபர்களுக்கு வழங்குகிறார்கள்.

'பிரதமர் மோடி கருநாடகம் வந்து, காங்கிரசார் தனக்கு கல்லறை கட்டுவதாக சொல்கிறார். இது எத்த கைய பேச்சு. நமது நாட்டில் வேறு யாரும் இவ்வாறு யோசிக்க மாட்டார்கள். நமது பிரதமரின் உடல் ஆரோக் கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும் புகிறோம். கல்லறை விஷயத்தை முன்வைத்து தேர்தல் நேரத்தில் மோடி பேசுகிறார். இது தான் தேர்தல் விஷ யமா?. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.

இதற்கிடையே மைசூரு கிருஷ்ணராஜநகரில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரியங்கா காந்தி பிரச்சார பேரணி நடத்தினார். அப்போது, தொண்டர்களையும், பொதுமக் களையும் பார்த்து கையசைத்தார். இதில் ஆயிரகணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment