பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம்

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம்  நிறுவனத் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்

 

வல்லம், ஏப்.13 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் சிறந்த தரமான கற்றல் கற்பித்தல் செயல் முறைகள், பாலிடெக்னிக் கல்லூரி யின் கல்விசார் நடை முறைகள், பாடத்திட்டம் சாரா நடைமுறைகள், மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஆகிய கல்லூரியின் சிறப்பான செயல் பாடுகள் குறித்து 20.01.2023 முதல் 22.01.2023 வரை தேசிய அங்கீகார வாரியம்(National Board of Accreditation) ஆய்வு செய்து இக் கல்லூரியின் 

1. கணினியியல் (Computer Engineering),

2. மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல்(Electronics and Communication Engineering),

3. மின்னியல் மற்றும் மின்னணுவியல்(Electrical and Electronics Engineering)

4. இயந்திரவியல் (Mechanical Engineering) ஆகிய துறைகளுக்கு 2023 முதல் 2026 வரை மூன்று ஆண்டு களுக்கான தேசிய அங்கீகாரம் (NBA Accreditation)  வழங்கப்பட்டுள்ளது.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறு வனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் இச் சிறப்புமிகு தேசிய அங்கீகாரத்தை (NBA Accreditation)பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரை பாராட்டினார்.

No comments:

Post a Comment