தேசியவாத காங்கிரசை உடைக்க பி.ஜே.பி. சதியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

தேசியவாத காங்கிரசை உடைக்க பி.ஜே.பி. சதியா?

மும்பை, ஏப். 20 - தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார், கட்சியின் 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை அஜித் பவார் மறுத்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவ ராக சரத் பவார் செயல்படுகிறார். அவரது அண்ணன் மகன் அஜித் பவார் அந்த கட்சியின் மூத்த தலைவராக உள்ளார். மகாராட்டி ராவில் 4 முறை துணை முதலமைச் சராக அவர் பதவி வகித்துள்ளார்.

தற்போது மகாராட்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் கட்சியின் 40 சட்டமன்ற உறுப்பி னர்களுடன் பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுடன் அஜித் பவார் ரகசிய ஆலோசனை நடத்தி யதாகவும் கூறப்படுகிறது. தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கங் களின் முகப்புப் பகுதியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கொடியை அவர் அகற்றியது பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கி ரஸ் தலைவர் சரத் பவார் 18.4.2023 அன்று செய்தியாளர்களிடம் கூறிய போது, “அஜித் பவார் தலைமையில் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட் டம் நடந்ததாகக் கூறப்படுவது அடிப் படை ஆதாரமற்றது.

எந்தவொரு கூட்டமும் நடத் தப்படவில்லை. கட்சியை வலுப் படுத்துவது குறித்து மட்டுமே ஆலோசித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார். இதே விவகாரம் தொடர்பாக அஜித் பவார் மும்பை யில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எந்தவொரு சட்டமன்ற உறுப்பின ரிடமும் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறவில்லை.

எனது உயிருள்ளவரை சரத் பவார் தலைமையின் கீழ் செயல் படுவேன். இது தொடர்பாக எழுத் துப் பூர்வமாக உறுதி அளிக்கவும் தயாராக உள்ளேன். நான் தேசிய வாத காங்கிரஸில் இருக்கிறேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண் டாம். இவ்வாறு அஜித் பவார் தெரிவித்தார்.

சரத் பவாரின் மகளும் நாடா ளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே செய்தியாளர்களிடம் கூறும் போது, “அடுத்த 15 நாட்களில் அரசியலில் 2 மிகப்பெரிய நிகழ்வு கள் அரங்கேறும். ஒரு நிகழ்வு டில்லியிலும் மற்றொரு நிகழ்வு மகாராட்டிராவிலும் நடை பெறும்’’ என்று தெரிவித்தார். என்ன நிகழ்வு நடைபெறும் என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, “சிவசே னாவை உடைத்தது போன்று தேசியவாத காங்கிரஸை உடைக்க சதி நடக்கிறது. இதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன் படுத்தப்படுகின்றன’’ என்று குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment