ஆளுநர்கள் ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிப்பதா? ப.சிதம்பரம் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

ஆளுநர்கள் ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்

புதுடில்லி, ஏப்.9  மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், அதை நிராகரித்ததாகவே அர்த்தம் என்று தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலை வரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சரு மான ப.சிதம்பரம், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் கூறியிருப்ப தாவது:- 

சட்டமன்றம் நிறைவேற்றிய மசோ தாக்களை நிலுவை யில் வைத்திருப்ப தற்கு வினோதமான விளக்கத்தை தமிழ் நாடு ஆளுநர் கூறியிருக்கிறார். அப்படி நிலுவையில் வைத் திருந்தால், மசோதா செத்து விட்டதாக அர்த்தம் என்று சொல்கிறார்.

 உண்மையில், ஒரு ஆளுநர் உரிய காரணம் இன்றி மசோதாவை முடக்கி வைத்திருந்தால், நாடாளுமன்ற ஜன நாயகம் செத்து விட்டதாக அர்த்தம். ஆளுநர் என்பவர் மசோதாவுக்கு ஒப்பு தல் அளிக்கலாம் அல்லது நிலுவையில் வைக்கலாம் அல்லது மசோதாவை திருப்பி அனுப்பலாம். அதே மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஆளுநர் பதவி, வெறும் அரசியல் சட்டப் பதவி மட்டுமே. அரசின் அடையாள தலை வராக அவர் இருப்பார். அவரது அதி காரங்கள் குறைவு. பெரும்பாலான விவ காரங்களில் அவருக்கு எந்த அதி கார மும் இல்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்தான் ஆளுநர் செயல்பட வேண்டும்.  ஆனால், பாரதீய ஜனதாவால் நிய மிக்கப்பட்ட ஆளுநர்கள், அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு, ஜனநாய கத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment