கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரிப்பு மருத்துவர்கள் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரிப்பு மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை,ஏப்.26- கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்தவமனையின் சேவைகளுக்கான மருத்துவ பிராந்திய தலைவர் மருத்துவர் சிறீனிவாச ராவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோடை காலத்தில், உலர்ந்த கண்கள், கண் அழற்சி, புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ் வாமையால் ஏற்படும் கண் அழற்சி மற்றும் கண் காயங்கள் அதிகளவில் ஏற்படு கின்றன.

அதன்படி, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு, ஒவ்வா மைகள் மற்றும் காயங்களிலிருந்து, கண்களை பாதுகாப்பது அவசியம். கண்களில் கண்ணீர் சுரக்காத போது, உலர்ந்த கண்கள் பிரச் சினை ஏற்படுகிறது. எனவே, கண் களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, தண்ணீர் அல்லது சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.

கடந்த இரண்டு வாரங்களாக, இளம் சிவப்பு கண் நோய் என்ற கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கண் தொற்றுகள் வராமல் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் கண்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

கான்டாக்ட் அணிபவராக லென்ஸ்களை நீங்கள் இருப்பின், லென்ஸ்களை கண்ணில் பொருத் துவதற்கும் அல்லது அகற்று வதற்கும் முன்னதாக உங்களது கைகளை கழுவுவது உட்பட முறை யான தூய்மை நடைமுறைகளை கடைப்பிடிக்கவும்.

கண்களை ஈரபதத்துடன் வைத் திருப்பதுடன், சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாது காத்துகொள்ள சன் கிளாஸ் அணிந்து வெளியே செல்ல வேண்டும். நீர்ச்சத்து குறையாத வாறு பானங்களை அருந்த வேண்டும். அடிக்கடி தண்ணீர் அருந்துவது நல்லது. 

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment