எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை

 திராவிடர் கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களிலிருந்துதான் சமூகநீதி அரசியலை நான் உள்வாங்கிக் கொண்டேன்! 

சமூகநீதிக்காக, சனாதன சக்திகளை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருக்கின்றார் அய்யா ஆசிரியர்!

கடலூர், ஏப்.7 தமிழர் தலைவர் அவர்கள் இந்த வயதிலும், ஓய்வை நாடாமல், தனிமையை நாடாமல், மக் களுக்காக, மக்களின் நலனுக்காக, சமூகநீதிக்காக, சனா தன சக்திகளை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருக்கின்றார் என்றார்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழா

கடந்த 31.3.2023 அன்று மாலை கடலூரில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நிறைவு விழா - மாநாடு

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க மாநாட் டிற்குத் தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழக மாநாட்டுத் தலைவர் மானமிகு சொ.தண்டபாணி அவர்களே,

நம் அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற திராவிடர் கழக மாவட்ட செயலாளர் எழிலேந்தி அவர்களே,

முன்னிலை வகித்து இந்த மாநாட்டினை சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற மண்டல தலைவர் அரங்க.பன்னீர் செல்வம், மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்டத் தலைவர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணி வேல், பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன்,  இளை ஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி, மகளிரணி செயலாளர் ரமாபிரபா ஜோசப் ஆகிய தோழர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று, சிறப்புரை வழங்கி அமர்ந் திருக்கின்ற வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களே,

திராவிட முன்மாதிரி அரசின் வழிகாட்டி 

தமிழர் தலைவர் ஆசிரியர்

ஈரோடு முதல் கடலூர் வரையில் 30 நாள்கள், 4 கட்டமாக தொடர் பயணத்தை மேற்கொண்டு, இன் றைக்கு 57 ஆவது பொதுக்கூட்டமாக, மாநாடாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்வின் நாயகர் சமூகநீதி பாதுகாவலர், திராவிட முன்மாதிரி அரசின் வழிகாட்டி தமிழர் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களே,

இந்த நிகழ்வில் எனக்குப் பின் இங்கே உரையாற்ற விருக்கின்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் கே.எஸ்.அழகிரி அவர்களே,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்திருக்கின்ற அன்பு இளவல் வி.கண்ணன் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளரும், புரட்சிப் புயல் அண்ணன் வைகோ அவர்களின் தளபதியாக, இந்த நிகழ்வில் பங்கேற்று இதனை சிறப்பித்துக் கொண் டிருக்கின்ற அன்பு இளவல் துரை.வைகோ அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிக் குழு செயலாளர் அண்ணன் இள.புகழேந்தி அவர்களே, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், அன்புச் சகோதரரு மான ரமேஷ் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கோ.அய்யப்பன் அவர்களே, திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் அண்ணன் துரை.சந்திரசேகரன் அவர்களே, இரா.ஜெயக்குமார் அவர்களே, அமைப்பாளர் இரா.குண சேகரன் அவர்களே,

வி.சிவக்குமார், மேயர் சுந்தரி ராஜா, தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப் பின் பொதுச்செயலாளர் பி.ராஜூ, காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வே.சந்திரசேகர், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் துணை மேயருமான வழக்குரைஞர் தாமரைச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆனந்த்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலாளர் திருமார்பன், சி.பி.அய் (எம்) மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் தோழர் துரை, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.இராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தம்பி முல்லைவேந்தன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் திலகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டப் பொறுப் பாளர் முகமது இஸ்மாயில், த.மு.மு.க. மாவட்டத் தலைவர் சேக் தாவூது, மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் அமீது, தமிழ்ச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்வேலனார், திராவிடர் கழகத் தின் மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மக்கள் அதிகாரம் பாலு, சி.பி.அய்.(எம்) எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் உள்பட மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சார்ந்த ஒன்றியப் பொறுப்பாளர்களே, பல்வேறு துணை நிலை அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளே, மாமன்ற உறுப்பினர்களே, பகுதிவாழ் செயலாளர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற திரா விடர் கழகத்தின் மாநகர செயலாளர் இரா.சின்னதுரை அவர்களே, மற்றும் இங்கே திரளாகக் கூடியிருக்கின்ற என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க மாநாட்டில் பங்கேற்று, உங்களிடையே உரையாற்றக்கூடிய ஓர் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக தமிழர் தலைவர் அய்யா அவர் களுக்கு முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடலூரிலே உரையாற்ற ஒரு வாய்ப்பு.

எழுச்சிமிகுந்த உங்கள் ஆரவாரத்தை கேட்கின்ற ஒரு வாய்ப்பு - அதற்காக நான் மீண்டும் ஒருமுறை திராவிடர் கழகத் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

அண்ணன் எம்.ஆர்.கே. அவர்கள் சொன்னதைப் போல, 90 வயதை எட்டிய நிலையிலும், ஓர் இளை ஞரைப்போல சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டி ருக்கின்றார் தமிழர் தலைவர் அய்யா அவர்கள். நமக்கு வியப்பாக இருக்கிறது; எண்ணிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

சமூகநீதிக்காக, சனாதன சக்திகளை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருக்கின்றார்

இத்தனை வயது வரை நம்மால் வாழ முடியுமா? என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. தமிழர் தலைவர் அவர்கள் இந்த வயதிலும், ஓய்வை நாடாமல், தனிமையை நாடாமல், மக்களுக்காக, மக்களின் நலனுக் காக, சமூகநீதிக்காக, சனாதன சக்திகளை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருக்கின்றார்.

30 நாள்கள் பயணம் - ஈரோட்டில் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கினார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் தொடங்கி, இன்றைக்குத் தமிழர் தலைவர் பிறந்த இந்தக் கடலூரிலே முடித் திருக்கிறார். பெரியார் அவர்களின் சொந்த ஊர் கடலூர்.

எதற்காக இந்தப் பரப்புரை?

திராவிட முன்மாதிரி அரசின் சாதனைகளை விளக்குவதற்காக...

சமூகநீதியைப் பாதுகாப்பதற்காகவும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல மைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திராவிட முன்மாதிரி அரசின் சாதனைகளை விளக்குவதற்காகவும் தமிழர் தலைவர் அவர்கள் இந்த மகத்தான பயணத்தை மேற்கொண்டு, இன்றைக்கு நிறைவு செய்கிறார்.

நிறைவு செய்யக்கூடிய இந்த நிகழ்வு, ஒரு மாநாட்டைப் போல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சனாதன சக்திகளுக்கு 

சவுக்கடி கொடுக்கின்ற மாநாடு!

ஆம்!

மாநாடுதான்!

மாபெரும் மாநாடுதான்!

வெற்றிகரமான மாநாடு!

எழுச்சிகரமான மாநாடு!

சனாதன சக்திகளுக்கு சவுக்கடி கொடுக்கின்ற மாநாடு!

சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கலாம் என்று கனவு காணுகின்ற நமது கொள்கைப் பகைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்ற மாநாடு!

பி.ஜே.பி.யின் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இயங்குகிறது. ஆனால், அது மிகவும் ஆபத்தான கொள்கைகளைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சமூகநீதி இயக்கங்களுக்கு பின்னணியில் ஒரு கொள்கைப் பின்னணி இருந்து, இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு பேரியக்கம்தான் திராவிடர் கழகம்.

இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய 

ஒரு மகத்தான கொள்கை இயக்கம்தான் திராவிடர் கழகம்!

இன்றைக்கு நாமாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், மேடையில் அமர்ந்திருக்கின்ற தலைவர் பெருமக்கள் யாராக இருந்தாலும், நாம் பேசுகின்ற சமூகநீதிக் கொள்கை என்பது, 

திராவிடர் கழகத்தால் முன்மொழியப்பட்டு, 

திராவிடர் கழகத்தால் வார்த்தெடுக்கப்பட்டு,

திராவிடர் கழகத்தால் பாதுகாக்கப்பட்டு வரு கிறது - தமிழ் மண்ணைப் பொறுத்தவரை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஒரு மகத்தான கொள்கை இயக்கம்தான் திராவிடர் கழகம். 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, காந்தியாரை தனது கொள்கை ஆசானாக ஏற்றுக்கொண்டு, அவர் கிழித்தக்கோட்டை தாண்டாத அளவிற்கு அவருடைய சீடனாக இருந்து, தீவிரமாகப் பணியாற்றியவர்.

காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர் தந்தை பெரியார்

காந்தியார் என்ன சொன்னாலும், அதை உடனே நடைமுறைப்படுத்தவேண்டும் என்கிற ஒரு துடிப்புமிக்க தொண்டனாக, காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர்தான் தந்தை பெரியார்.

ஆனால், சமூகத்தில் நிலவுகிற ஜாதியப் பாகுபாடுகள், ஆணாதிக்கப் போக்குகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இவற்றையெல்லாம் கண்டு குமுறிய பெரியார் அவர்கள், அவற்றை அழித்தொழிக்கவேண்டும், சமத்துவத்தை இந்த மண்ணில் நிலைநாட்டவேண்டும் என்பதற்காக தேர்தல் அரசியலை ஏற்காமல், முழுநேர மும் மக்களை அரசியல்படுத்துகின்ற பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்தான் தந்தை பெரியார்.

எல்லோருக்குமான கொள்கை ஆசான், நம்முடைய இயக்கங்கள் வெவ்வேறாக இருக்கலாம்; கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ் பேரியக்கம், விடுதலைச் சிறுத்தை கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி இப்படி நாம் வெவ்வேறு பெயர்களில் இயங்கலாம்; ஆனால், நம் அனைவருக்கும் ஏற்புடைய சமூகநீதிக் கொள்கையை இந்த மண்ணில் விதைத்த பெருமை - இந்தியாவிற்கே வழிகாட்டிய பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைச் சாரும்; அவர் நிறுவிய திராவிடர் கழகத்தைச் சாரும்.

பெரியார் காலமானார் என்றதும், திராவிடர் கழகம் ஒழிந்தது, இனி பகுத்தறிவுப் பிரச்சாரம் இருக்காது; இந்த மக்களின் மூடநம்பிக்கையை வைத்து நாம் இன்னும் பல தலைமுறைகள் கொட்டமடிக்கலாம் என்று சனாதனக் கும்பல் கனவு கண்டது.

கடலூரைச் சார்ந்த 

மண்ணின் மைந்தர்

ஆனால், திராவிடர் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது; அதைப் பாதுகாத்து வருவதற்கு, அதனைத் தொடர்ந்து வழிநடத்தி முன்னெடுத்துச் செல்லுவதற்கு இதோ ஒரு தலைமை என்று தோன்றியவர்தான் தமிழர் தலைவர் - கடலூரைச் சார்ந்த மண்ணின் மைந்தர், நம்முடைய அய்யா ஆசிரியர் அவர்கள்.

1973 இல் தந்தை பெரியார் காலமாகிவிட்டார்; பல பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. அரை நூற் றாண்டுக்கு மேலாகிவிட்டது. இந்த அரை நூற்றாண்டு காலமாக திராவிடர் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், திராவிடர் கழகத்தின் கொள்கைகளை இன்றைக்குப் பரவலாக, இந்தியா முழுவதும் கொண்டு சென்ற பெருமை நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையே சாரும்.

சமூகநீதி அரசியலை உள்வாங்கிக் கொண்டது திராவிடர் கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களிலிருந்துதான்!

நான் அடிக்கடி பெருமையோடு சொல்லுவேன், நான் அரசியலைக் கற்றுக்கொண்டது திராவிடர் கழகத்தின் பெரியார் திடலில்தான். சமூகநீதி அரசியலை உள்வாங்கிக் கொண்டது திராவிடர் கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களிலிருந்துதான். தமிழர் தலைவர் அவர்களின் உரைகளிலிருந்துதான் என்று நான் பெருமையோடு சொல்லிக் கொள்கின்றேன்.

தமிழர் தலைவர் அய்யா அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 

வழங்கியிருக்கின்ற சான்றிதழ்!

அதனால்தான், தமிழர் தலைவர் அவர்கள் சொல்வார், ‘‘தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா சொன்னார்; இப்பொழுது நான் சொல்லுகிறேன், விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்த்து மூன்றாவது குழல்'' என்று தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய மகத்தான தலைவர் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வழங்கி யிருக்கின்ற சான்றிதழ் என்பதை நான் பெருமை யோடு சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

(தொடரும்)


No comments:

Post a Comment