எச்சரிக்கை - பெண்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

எச்சரிக்கை - பெண்களே!

இணைய வழிக் காணொலி சேனல்களில் வரும் தகவல்கள் 75 விழுக்காடு உண்மையானதாக இருக்காது.

இணைய வழிக் காணொலி சேனல்களில் வலம் வரும் மருத்துவக் குறிப்புகளை, தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்பே பின்பற்ற வேண்டும். முறையான ஆலோசனை இல்லாமல், எந்த மருந்தையும் நீங்களாக மருந்துக் கடைகளில் வாங்கி சாப்பிடக் கூடாது.

சமூக ஊடகங்களில் மக்களின் வரவேற்பைப் பெற்று வேகமாக வளர்ந்து வருவது இணைய வழிக் காணொலி. உணவு, உளவியல், நிதி மேலாண்மை, கல்வி, வேலை வாய்ப்பு, கலாச்சாரம், பயணம் என அனைத்தையும் இருக்கும் இடத்தில் இருந்தே இணைய வழிக் காணொலி சேனல் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு இணைய வழிக் காணொலி சேனல்களில் பகிரப்படும் தகவல்களை முழுமையாக நம்பி அவற்றை பின்பற்றுவது சரியா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

இணைய வழிக் காணொலி சேனல்களில் பகிரப்படும் விஷயங்கள் முழுவதுமே தவறானவை என்று கூற முடியாது. அவற்றில் எது உண்மை? எது பொய்? என்பதை பொறுமையாக விசாரித்து அறிந்த பிறகு தான் செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக இணைய வழிக் காணொலி சேனல்களில் வலம் வரும் மருத்துவக் குறிப்புகளை, தகுந்த மருத்துவரின் ஆலோ சனையைப் பெற்ற பின்பே பின்பற்ற வேண்டும். முறையான ஆலோசனை இல் லாமல், எந்த மருந்தையும் நீங்களாக மருந்துக் கடைகளில் வாங்கி சாப்பிடக் கூடாது. இதனால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படலாம். இணைய வழிக் காணொலியில் ஒரு செய்தியை பார்த்த உடனேயே, அதனை மற்றவர்களுக்கு பகிரக் கூடாது. அதன் உண்மைத் தன்மையை தெளிவாக அறிந்த பிறகே பகிர வேண்டும். உடற் பயிற்சி, யோகா போன்றவை நன்றாகப் பயிற்சி பெற்றவர்களால் செய்து காட்டப் படும்போது, அதனை வரவேற்கலாம். அதேசமயம், அவற்றை பயிற்சி செய்வதற்கு முன்பு, அந்த துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பெண்களுக்கு உதவும் வகையிலான சமையல், குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு தொடர்பான ஆலோசனைகள் பல இணைய வழிக் காணொலி சேனல்களில் வழங்கப்படுகின்றன. அவற்றால் பலர் பயன் பெறுகிறார்கள். அதேநேரத்தில், அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்ந்த பிறகே பின்பற்ற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். எந்த ஒரு இணைய வழிக் காணொலி சேனலின் தகவல்களைப் பற்றி யும் உறவினர்கள், நண்பர்கள் அல்லது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நபரிடம் கலந்தாலோசித்த பிறகு அதை பின்பற் றலாம். சினிமாவிற்கு 'சென்சார்' என்ற கட்டுப்பாடு இருப்பது போல், இணைய வழிக் காணொலி சேனல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு என்பது தனியாக இல்லை. ஆகையால், உங்கள் வீட்டில் உள்ள குழந் தைகள் பார்க்கும் இணைய வழிக் காணொலி சேனல்களை நீங்களே மேற்பார் வையிட வேண்டும். வாழ்வில் எதிலும், எங்கும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவதே பாதுகாப்பை உறுதி படுத்தும்.

தமிழ்நாட்டில் இணைய வழிக் காணொ லியில் உள்ள ஆலோசனைகளைக் கேட்டு  பிரசவம் பார்த்தபோது சிசுவும், தாயும் மரணித்த செய்தி, கடந்த வாரம் கல்லூரி மாணவி ஒருவர் இணைய வழிக் காணொ லியைப் பார்த்து தனது கருவைக் கலைக்க முற்பட்டு மரணமடைந்ததும், இணைய வழிக் காணொலியில் பாஜக முக்கிய பிரமு கரின் மகள் ஒருவர் தன்னை சித்த மருத் துவர் என்று கூறிக்கொண்டு கண்டதை உளறிவைக்க அதனால் பாதிக்கப்பட் டவர்கள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இது சமீபத்தில் நாளிதழ்களில் வந்த செய்தி கள் இன்னும் அதிக பாதிப்புகள் உள்ளது, ஆகவே இணைய வழிக் காணொலி ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி பாதகமான விளைவுகளில் சிக்கிக்கொள் ளாதீர்கள்.

No comments:

Post a Comment