பி.ஜே.பி. எம்.பி.மீது தகுதி நீக்கம் இல்லை; ஆனால், ராகுல்மீது தகுதி நீக்கமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

பி.ஜே.பி. எம்.பி.மீது தகுதி நீக்கம் இல்லை; ஆனால், ராகுல்மீது தகுதி நீக்கமா?

ஏனிந்த இரட்டை வேடம்: கார்கே தாக்கு

புதுடில்லி,ஏப்.6- காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே நேற்று (5.4.2023) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது: 

குஜராத்தை சேர்ந்த பாஜக நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும் 16 நாட்கள் வரை அவர் தகுதியிழப்பு செய்யப் படவில்லை.

ஆனால் ராகுல் காந்தி மின்னல் வேகத்தில் தகுதியிழப்பு செய்யப்பட் டுள்ளார். இதுமோடி அரசின் கபட நாடகம் மற்றும் இரட்டை நிலைப் பாடுகளின் உச்சம். மோடி ஆட்சியில் யாருக்கு நிவாரணம் கிடைக்கிறது, யார் தண்டிக்கப்படுகிறார்கள் என் பதை பார்க்க முடிகிறது. குஜராத் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளு மன்ற கூட்டத்தில் பங்கேற்க அனு மதிக்கப்பட்டார். ஆனால், உண் மையைப் பேசும் ஒருவர் நாடாளு மன்றத்துக்கு வெளியில் வைக்கப் பட்டுள்ளார். 

- இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

3 ஆண்டுகள் 

சிறைத் தண்டனை

குஜராத்தில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் அம்ரேலி நாடாளுமன்ற உறுப்பினர் நாரன்பாய் பிகாபாய் கச்சாடியா வுக்கு ராஜ்கோட் நீதிமன்றம் கடந்த 2016 ஏப்ரலில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பிறகு இந்தத் தண்டனை உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதையே மல்லி கார்ஜுன கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், ராகுல் காந்தி தகுதி இழப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி யுள்ளார்.

No comments:

Post a Comment