டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் ரத்து; ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 10, 2023

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் ரத்து; ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும்!

‘ஸ்டெர்லைட்' ஆலை - பா.ஜ.க.வுக்குக் கைமாறிய தொகைபற்றி வெளிவந்துள்ள செய்திக்குப் பதில் என்ன?

தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, ஏப்.10  தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம், ‘ஸ்டெர்லைட்' ஆலைப் பிரச்சினை யில் பணம் கைமாறல் குறித்து செய்தியாளர்களிடம் தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.

வடசேரி, சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருந்ததைக் கண்டித்து, கடந்த 8.4.2023 அன்று தஞ்சையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தின் முன் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

முழுமையான வெற்றியல்ல; 

ஆபத்து இருக்கிறது!

செய்தியாளர்: ஒன்றிய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கியிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டின் இந்த வெற்றியை முழுமை யாகப் பார்க்க முடியாது; ஆபத்து இருக்கிறது என்று சொல்கிறீர்களே, அதற்கு என்ன காரணம்?

தமிழர் தலைவர்:  ஏற்கெனவே கொடுத்த உத்தர வாதங்கள் எல்லாம் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எப்பொழுதும் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலை.

இதைவிட இப்பொழுது வந்திருக்கின்ற இன் னொரு செய்தி பூவுலக நண்பர்கள் அமைப்பு, முற்றி லும் இதுபற்றி அதிகமாகக் கவலைப்படக்கூடிய தமிழ் நாட்டில் செயல்படக்கூடிய அமைப்பு.

ஒன்றிய அமைச்சர் சொன்னதுபோல, முழுமையாக அந்தத் திட்டம் பின்வாங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவுதான் அறிவித்திருக்கின்றார் என்று அய்யத்தோடு சொல்லியிருக்கிறது.

எனவேதான், அந்தப் பிரச்சினை முழுமையாகத் தீர்ந்துவிட்டது என்பதற்கு வெறும் அமைச்சருடைய பதில் மட்டும் போதாது.

ஒன்றிய அரசினுடைய அதிகாரப்பூர்வமான அறி விப்பு, அரசு ரீதியாக வரவேண்டும்.

தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு 

நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

என்றாலும், இந்த அளவிற்கு அவர்கள் அறிவித் திருப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்குக் காரணமாக உடனடியாக செயல்பட்ட முதலமைச் சருக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த பாராட்டு - தமிழ் நாட்டு விவசாயிகளின் அத்துணைப் பேரின் சார்பில் மகிழ்ச்சி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

ஏனென்றால், உரிய நேரத்தில், உரிய வேகத்தோடு, உரிய கருத்துகளை அறிவிப்பது என்பது நம்முடைய முதலமைச்சரின் அணுகுமுறை. 

அந்த அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி; மக்களுக்குக் கிடைத்த வெற்றிதான் இது.

ஆன்-லைன் சூதாட்டத் தடை பிரச்சினையில் அண்ணாமலையின் பங்களிப்பு என்ன?

செய்தியாளர்: அண்ணாமலை பேட்டி கொடுக் கின்றபொழுது,  இரண்டு நாளில் ஓர் இனிப்பான செய்தி வரும் என்று சொல்லியிருந்தார். இன்றைக்கு அந்தச் செய்தி வந்திருக்கிறது; இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்:  வேறு யாராவது உழைப்பில் வெற்றி வந்தால், அதைத் தங்களுக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடியவர்தான் இவர்.

பல பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இருக்கிறதே, குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தாரே, அதுகுறித்து ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

அரசமைப்புச் சட்டத்தில் 34 ஆவது பிரிவு, மாநில அரசுக்கு சட்டப்படி உரிமை உண்டு என்று இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறாரே, ஏன் இதனை செய்யக்கூடாது? இதில் அண்ணாமலையினுடைய பங்களிப்பு என்ன? இதையெல்லாம் செய்துவிட்டு, மக்கள் மன்றத்தைச் சந்திக்கட்டும் அவர்.

6 ஆம் தேதியன்று கொடுக்கப்பட்டது, இன்றைக்கு அதுகுறித்த அறிவிப்பு வருகிறது என்கிற கேள்வி மிக முக்கியமான கேள்வியாகும். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியவர்கள் அவர்கள்தான்.

அதிகாரப்பூர்வமாக 

ஒன்றிய அரசு அறிவிக்கவேண்டும்

செய்தியாளர்: அண்ணாமலை, நிலக்கரி எடுப்பதற்கு அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசு அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்:  வாட்ஸ் அப்பில் வருவது, முக நூலில் வருகின்ற செய்திகள் எல்லாம் அதிகாரப்பூர்வ மான செய்திகள் அல்ல என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

ஆகவே,  அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசு சார் பாக, இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்று இருக்க வேண்டும்.

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது போன்ற செய்திகள் எல்லாம் அதிகாரப்பூர்வமானதல்ல என்பதுதான்.

'விடுதலை' நாளேட்டில் 

ஆதாரத்தோடு வந்த செய்தி!

செய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ரான போராட்டங்களுக்குப் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் சொல்லியி ருக்கிறாரே?

தமிழர் தலைவர்:  அதுபற்றி மிக முக்கியமான அள விற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது. ஆளுநரின் கருத்துக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட ஒருவர், அவதூறு நோட்டீசை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்கள் தன்னுடைய வாழ் நாள் முழுக்க பெரும்பாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களிலேயே கழித்திருக்கிறார்.

‘விடுதலை'யில் ஒரு செய்தி வந்திருக்கிறது - ‘‘‘ஸ்டெர்லைட்' ஆலை, பா.ஜ.க.விற்கு கொடுத்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்க்கான சான்று'' என்று போட்டிருக்கிறது.

இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லுகிறார்?

ஆளுநர் என்ன சொல்லுகிறார்?

ஏனென்றால், இப்பொழுது ஆளுநர் பா.ஜ.க.வி னுடைய முகவர் போன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரச்சாரகராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், ‘விடுதலை'யில் வந்த செய்திக்குப் பதில் சொல்லட்டும்.

ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியை வெளியிட்டு கேட்கிறோம். ஆளுநரோ, வெறும் வாய்மொழிமூலம் சொல்லுகிறார்; ஆதாரத்தோடு சொல்லட்டும்.

இதுவரையில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த உரிமைக்கான போராட்டத்தில், எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கின்றன! 

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அனுமதிக்காத ஒரு திட்டம் குறித்து, அதைக் கொச்சைப்படுத்துவதற்கு, கேவலப்படுத்துவதற்கு ஒரு ஆளுநரே இப்படி சொல்லி யிருக்கிறாரே!

அரசினுடைய கொள்கையைப் பின்பற்றவேண்டிய ஆளுநர், கொள்கைப்படி நடக்கவேண்டிய ஓர் ஆளுநர், அந்தக் கொள்கைக்கு நேர் விரோதமாக நடக் கிறார் என்றால், ஆளுநர் பதவி வகிக்க அவருக்குத் தகுதி இருக்கிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.

நன்றி,வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment