'தினமலர்' அந்துமணிக்கு சாட்டை - ம. கவிதா, திருப்பத்தூர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

'தினமலர்' அந்துமணிக்கு சாட்டை - ம. கவிதா, திருப்பத்தூர்

சிறப்பீனும் - கருப்பு!

கேள்வி: "அட, தொடர்ந்து எழுபது ஆண்டுகளுக்கு மேல் கருப்புச் சட்டை அணிந்து கொண்டிருப்பது போரடிக்கவில்லையா? மற்ற நிற ஆடைகள் அணியத் தோன்றியதே இல்லையா?" 

பதில்: "தொடர்ந்து மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதால் அது போரடித்து விடுமா என்ன? நிறத்தை விரும்பி நான் கருப்புச் சட்டை அணிந்திருந்தால் ஒரு வேளை போரடித்திருக்கும். ஆனால் கொள்கைக்காக- இலட்சியத்திற்காக அணிந்துள்ளபோது எப்படி அலுக்கும் நண்பரே?" இது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பதில். பொழுதுபோக்குக்காக அல்லாமல் போராட்டத்திற்காகவே பொழுதும் அவர் கருப்புச் சட்டை போட்டதே  சாதனை தான்!

ஏனெனில் கடவுள்களால் கை நாட்டுகளாக்கி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு கல்வியை வழங்க நாளும் போராடிய கருப்புச் சட்டையது!

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக் கீட்டு உரிமை பெற ஆண்டு வருமான வரம்பு ஒன்பதாயிரத்துக்குள் இருக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் அரசா ணைக்கு எதிராகக் கடும் போராட் டங்களை நடத்தி அதன் மூலம் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு 50 விழுக்காடு ஆக உயர வழிவகை செய்த கருப்புச் சட்டையது!

மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த மாநாடுகள்- போராட் டங்கள் நடத்தி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்த கருப்புச் சட் டையது!

69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாது காக்க 31 சி சட்டம் இயற்றி இந்திய அரசியல் சாசனத்தின் ஒன்ப தாம் அட்டவணையில் சேர்க்கும் படி செய்த கருப்புச் சட்டையது! 

21 ஆண்டுகள் தொடர்ந்து போராடி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வைத்து, இன்றும் தொடரும் தடைகளுக்கு எதிராக பல்லாயிரம் மைல்கள் பயணித்துப் போராடிக் கொண்டிருக்கும் கருப்புச் சட்டையது!

ஓராண்டு மிசா உள்பட சமூக நீதிக்காக ஒரு நூறு சிறைகள் கண்ட கருப்புச் சட்டையது!

மாணவப் பருவத்திலேயே முழக்கம், புதுமை என்ற இரண்டு கையெழுத்து ஏடுகளை நடத்தியது மட்டுமல்ல, 60 ஆண்டுகளுக்கும் மேலாக 'விடுதலை'யின் ஆசிரியராகி உலக சாதனை பெற்ற கருப்புச் சட்டையது!

150 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், காவிகளால் எழுதப்பட முடியாத கலப்படமில்லா "வாழ்வியல் சிந்தனை கள்" 16  தொகுதிகள் உள்ளிட்டவற்றைக் கூட தள்ளி வைத்தாலும் 'கீதையின் மறுபக்கம்' எழுதியதினும் - இந்தக் கருப்புச் சட்டையின் சாதனை வேறொன்று  சனாதனிகளிடம் அறி யப்படுத்தவும் வேண்டுமோ?

 பெரியார் திரைப்படம், பெரியார் வலைக்காட்சி பெரியார் புத்தக நிலையம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், இனிவரும் பெரியார் உலகம் என பெரியாரைப் பேசிப் பேசி தமிழ்நாட்டை பெரியார் மண்ணாக்கி- ஆதிக்கத்திற்கு எதி ரான அடையாளமாக்கி இந்திய ஒன் றியத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த கருப்புச் சட்டையது என்பதை கவனத்தில் கொண்டே காண்பவர் எவரும் கருத்திட வேண்டும்! 

இது எடுத்துக்காட்டுதான், ஏடு களில் எழுதி ஆகாது ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உழைப்பும் பயனும்!

குறிப்பு: இப்பகுதியில் சுருக்கமாகப் பதிவிடுக!


No comments:

Post a Comment